(வீடியோ) கார்கள், கட்டிடங்கள் எரிப்பு.. பிரான்சில் கலவரம்... அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.


பிரான்ஸில் பல இடங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளது.

Yellow Vest என கூறப்படும்  முகமூடி அணிந்த குழுவொன்று பல இடங்களில் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல கார்கள், கட்டிடங்கள்  நெருப்பு வைக்கபட்டுள்ளன. கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 1500 பேர் வரை இதில் ஈடுபட்டுள்ளனர்.

 இதனை கருத்திற் கொண்டே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி பாரீஸ் நகரில் நேற்று பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அரசு தரப்பு, கலவர சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பிரான்ஸ் அரசு தரப்பின் செய்தித் தொடர்பாளர், கூறுகையில்,

‘அமைதியான முறையில் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதைப் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

அத்துடன் திடீரென்று ஏற்பட்டுள்ள இந்த கலவர சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன், பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அரசுக்கு எதிரான போராட்டம் நவம்பர் 17 ஆம் தேதி ஆரம்பித்துள்ளது.
(வீடியோ) கார்கள், கட்டிடங்கள் எரிப்பு.. பிரான்சில் கலவரம்... அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. (வீடியோ) கார்கள், கட்டிடங்கள் எரிப்பு.. பிரான்சில் கலவரம்... அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. Reviewed by Madawala News on December 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.