இருமுறை நீதிமன்றம்... மூன்றாவதாக மக்கள் மஹிந்த ராஜபக்ஷ தரப்பை தோல்வியடைய செய்வர்.


மஹிந்த ராஜபக்ஷ இப்போதாவது கௌரவமான முறையில் தனது பிரதமர் பதவியை  இராஜினாமா
செய்து கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி இருந்தவாறு நாட்டைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க எடுத்த தீர்மானம் சட்டத்துக்கு முரணானது என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் ஜனாதிபதி சட்டத்தை மீறியுள்ளார் என்பதுடன் அதிகாரத்தையும் தவறான முறையில் பயன்படுத்தியவராக மாறியுள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பின் காணப்படும் இறைமை, நீதிமன்ற சுயாதீனத் தன்மை, நாட்டு மக்கள் முன்னெடுத்த அகிம்சை ரீதியிலான போராட்டம் என்பனவற்றை உறுதிய செய்த நீதிமன்ற தீர்ப்புக்கு கௌரவங்கள் உரித்தாகட்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


இந்த தீர்ப்பினால் மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசியல் தோல்வியொன்று ஏற்பட்டுள்ளதுடன், மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற அவரின் கனவுக்கு பாரிய சவாலாகவும் மாறியுள்ளது.


மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் முதலாவது தோல்வியையும், உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது தோல்வியையும் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தரப்பு மக்கள் நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாகவும் தோல்வியடையும் எனவும் பாட்டளி சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டார். D C
இருமுறை நீதிமன்றம்... மூன்றாவதாக மக்கள் மஹிந்த ராஜபக்ஷ தரப்பை தோல்வியடைய செய்வர். இருமுறை நீதிமன்றம்... மூன்றாவதாக  மக்கள் மஹிந்த ராஜபக்ஷ தரப்பை தோல்வியடைய செய்வர். Reviewed by Madawala News on December 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.