எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு - Madawala News Number 1 Tamil website from Srilanka

எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு
னது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும்
என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். 

ரிஷாத் பதியூதினை கொலை செய்யும் திட்டம் குறித்து நாமல் குமார வெளியிட்ட குரல் பதிவு அதொடர்பில் அண்மையில் அகில இலங்கை மக்கள் சார்பில் பொலிஸ் தெலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ரிஷாத் பதியுதீன் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்தார். 

அதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார். 

தன்னை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ள நிலையிலும் தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். 

தற்போது பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே இருப்பதாகவும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்று ரிஷாத் பதியுதீன் இதன்போது கூறினார்.
எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5