ரனிலுடன் இணைந்து செயலாற்ற மாட்டேன்; சுதந்திர கூட்டமைப்பிடம் மீண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு ..



ரனில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயலாற்ற மாட்டேன்  என சுதந்திர
கூட்டமைப்பிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக லக்‌ஷ்மன் யாபா அபேகுனவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.

இன்று மாலை ஜனாதிபதி மற்றும் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் இடையே நடைபெற்ற விஷேட கலந்துரையாடலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஒரே அணியாக சுதந்திர கூட்டமைப்பு அணி இருந்து செயற்படுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டாதாக கூறிய அவர்  எந்த சூழ்நிலையிலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க கூடாது என கோரியுள்ளார்.

நாளை மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்பதாக தெரிவித்தார்.
ரனிலுடன் இணைந்து செயலாற்ற மாட்டேன்; சுதந்திர கூட்டமைப்பிடம் மீண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு .. ரனிலுடன் இணைந்து செயலாற்ற மாட்டேன்; சுதந்திர கூட்டமைப்பிடம் மீண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு .. Reviewed by Madawala News on December 13, 2018 Rating: 5