உச்ச கட்ட பரபரப்பில் இலங்கை அரசியல் நெருக்கடி !



மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்றைய நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் தீர்மானம் தொடர்பில் முடிவு செய்யப்படும் என கொழும்பு அரசியல் உயர்மட்ட பிரமுகர் ஒருவர் மடவளை நியுசுக்கு தெரிவித்தார்.


நேற்றைய நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் அவசரமாக கூடிய சுதந்திர கூட்டமைப்பினர் அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ள அதேவேளை இதன் போது பெரும்பான்மை உள்ள ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குவது சிறந்தது என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன் போது தான் மீண்டும் ரனில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயலாற்ற மாட்டேன் என அங்கு மைத்திரிபால சிரிசேன கூறியுள்ள அதேவேளை மிகவும் காரசார தொனியிலேயே அதனை அவர் கூறியதாக நம்பகமான தகவல்கள் உறுதி செய்துள்ளன.


இது இவ்வாறு இருக்க ரனில் தரப்பு பிரதமர் பதவியை பெற்றே தீருவது என்பதில் மிக உறுதியாக இருப்பதாக கூறப்படும் அதேவேளை எதிர்வரும் திங்கள் கொழும்பில் ஐக்கிய தேசிய முன்னணி ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி மூலம் ஜனாதிபதிக்கு பாரிய அழுத்தத்தை வழங்க நேற்று அலரி மாளிகையில் மந்திர ஆலோசனை இடம்பெற்றுள்ளது.


இதன் போது கருத்து கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் பாரிய அளவில் கொழும்பிற்கு மக்களை அழைத்து வந்து நாடே திரும்பி பார்க்கும் அளவு ஒரு போராட்டத்தை நடத்த யோசனை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

உச்ச கட்ட பரபரப்பில் இலங்கை அரசியல் நெருக்கடி ! உச்ச கட்ட பரபரப்பில் இலங்கை அரசியல் நெருக்கடி ! Reviewed by Madawala News on December 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.