இரகசியக் கொலைகாரன்...


இரவு 12 மணி டிங் டிங் டிங் முதலிரவில் நங்கையைக் காத்திருந்த மன்னவன் போல் தனது கைத்தொலைபேசியை
சுரண்டும் அதிஷ்ட இலாபச் சீட்டைப் போல் சுரண்ட ஆரம்பிக்கிறான் முகநூல் பிரியன்....

தனது இரவு நேர Data வை பாவித்து முடித்து விடவேண்டும் என்ற வெறியில் தூக்கத்தை தொலைத்துவிடுகிறான்....

அதேபோல் வெளிநாட்டில் இருக்கும் கணவனுடன் தனது இல்லற வாழ்வை தனது குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு தனது இரவு நேர Data மூலம் கழிக்கிறாள் ஏக்கத்துடன் மங்கை....

ஒவ்வொரு புதிய சினிமா பிரசவிக்கப்பட்டவுடன் Download செய்யும் சினிமாப் பித்தனின் உற்சாக நேரமும் இரவு 12 மணி பிந்திய Data வை அனுபவிப்பதில்தான் அடங்கியுள்ளது....

இரவு 12 மணி பிந்திய நேரம் என்பது மனிதனின் உடலுக்கு ஓய்வு கொடுக்கவேண்டிய கட்டாயப் பொழுது....

அவ்வேளைகளில் விழித்திருப்பதால்....
மன உளைச்சல்....
அனைவருடனும் கோபிக்கத் தூண்டும் ஒரு வகை மனநிலை....

அவ்வேளைகளில் அதிகம் கணனி அல்லது கைத்தொலைபேசி பாவிப்பதால் நம் உடலின் அருட்கொடையாம் கண்கள் இரண்டும் படிப்படியாக வலுவிழந்து  செல்லும் நிலை....

தலையிடி....

சீரான தூக்கமின்மை....

காலையில் எழும்பியவுடன் உடற்சோர்வு....

உடல் சூட்டு நோய்கள்....

மலச்சிக்கல்....

மாரடைப்பு....

போன்றவை ஏற்படும் என்பவற்றில் சிறிதளவும் ஐயமில்லை....

இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு இவ்விடயத்தில் கரிசனை கொள்வதில்லை....

இதற்கான தீர்வு Telecommunications Regulatory Commission (TRCSL)யினால் இரவு நேர பகல் நேர Data திட்டங்கள் என்று இல்லாமல் மாற்றி Anytime Data Plane யை மாத்திரம் குறைந்த கட்டணத்தில் அமுல் படுத்துவது மக்களின் சுகாதாரத் தேவை....

மற்றும் இணையப் பாவனை நேர கட்டுப்பாடுகளையும் வேகக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவேண்டியது TRCSL யின் கட்டாய கடமை....

மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கவர்ச்சியான மாயையான விளம்பரங்களில் சிக்கிப்பின்னி சீரழிந்து விடாதீர்கள் (குறிப்பாக மாணவர்கள்)....

எனவே இந்த நடுநிசி நேர இரகசியக் கொலைகாரனின் பிடியில் இருந்து தப்பிவிட எனக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறவினர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என் மேல் திணிக்கப்பட்ட காலத்தின் கட்டாய கடமை....

BY: ஜுனைத் முஜீப் 
இரகசியக் கொலைகாரன்... இரகசியக் கொலைகாரன்... Reviewed by Madawala News on December 05, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.