என்னை ஓரங்கட்டுகிறார்கள்... கட்சி சம்மேளனத்திற்கும் அழைக்கவில்லை.


(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டும் நடவடிக்கை மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதாக,
தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, கட்சி சம்மேளனத்திற்கு அழைப்பு கிடைக்கப்பெறாமையினாலேயே வருகை தரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு கடந்த 4 ஆம் திகதி செவ்வாய் கிழமை இடம்பெற்றது. அந்த மாநாடு குறித்த சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அதாவது கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாடு குறித்து இன்று வரையில் எனக்கு எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெறவில்லை.

கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களுக்கு மாநாடு குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் சுவரொட்டிகள் மற்றும் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை சுதந்திர கட்சியின கம்பஹா மாவாட்ட செயளாலர் லசந்த அழகியவண்ண வழங்கியுள்ளார்.

 சுதந்திர கட்சியிலிருந்து என்னை தொடர்ந்தும் ஓரங்கட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை சம்மேளனத்திற்கு அழைப்படாமை ஊடாக வெளிப்படுகின்றது. எனவே தான் செவ்வாய் கிழமை இடம்பெற்ற சுதந்திர கட்சி சம்மேளனத்தை தவிர்த்துக் கொண்டேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னை ஓரங்கட்டுகிறார்கள்... கட்சி சம்மேளனத்திற்கும் அழைக்கவில்லை. என்னை ஓரங்கட்டுகிறார்கள்...  கட்சி சம்மேளனத்திற்கும்  அழைக்கவில்லை. Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5