பேஸ்புக் தோழியை தேடி பாகிஸ்தான் சென்ற ஹமித் அன்சாரி, 6 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு.


பேஸ்புக் காதலியைத் தேடி, போதிய ஆவணங்கள் இல்லாமல் பாகிஸ்தான் சென்ற இந்தியர், ஆறு வருட சிறைத்
தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைகளில் 
பேசு பொருளாகி உள்ளது.


மும்பையை சேர்ந்தவர் ஹமித் நேஹல் அன்சாரி (33). என்ஜினீயரான இவர் பேஸ்புக்கில் இவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தோழியாக அறிமுகமானார். அங்குள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கரக் நகரைச் சேர்ந்த அந்த பெண்ணும் அன்சாரியும் தினமும் சாட் செய்துள்ளனர். பின்னர் இந்த நட்பு காதலாக மாறியது. இந்நிலையில் அன்சாரியுடனான நட்பை துண்டித்தார் அந்தப் பெண். .

.இதனால் சோகமான அன்சாரி, அந்தத் தோழியை சந்திக்க முடிவு செய்து, ஆப்கானிஸ்தான் வழியாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். அங்கு கரக் நகர் ஓட்டல் ஒன்றில் 2 நாள் தங்கிய அவரை உளவு பிரிவு போலீசார், 2012-ம் ஆண்டில் கைது செய்தனர்.
போதிய ஆவணங்கள் இல்லாமல் நுழைந்து, உளவு பார்க்கவும் சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் வந்ததாகக் கூறி, ராணுவ நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு அவருக்கு 3 வருட சிறை தண்டனையை வழங்கியது. 


ஏற்கனவே அவர் 3 வருடம் சிறையில் இருந்துள்ளார். அவரது தண்டனை காலம் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தது. ஆனாலும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.
இதுபற்றி பெஷாவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அன்சாரி தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்படவில்லை என்ற தெரிவித்த சிறைத்துறை அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்றுகொள்ள மறுத்த பெஷாவர் உயர் நீதிமன்றம் அன்சாரியை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பெஷாவர் நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஹமித் நிஹால் அன்சாரி இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்துள் ளார்.

நன்றி —புதிய தலைமுறை—
பேஸ்புக் தோழியை தேடி பாகிஸ்தான் சென்ற ஹமித் அன்சாரி, 6 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு. பேஸ்புக் தோழியை தேடி பாகிஸ்தான் சென்ற ஹமித்  அன்சாரி, 6 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு. Reviewed by Madawala News on December 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.