மணி 4 பிந்திட்டு... இன்னும் தீர்ப்பு வரல்ல...


நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை
சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட  வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நிமிடங்களில் வௌியாகவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில்  கூடுதலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் தீர்ப்பை எதிர்பார்த்து பொதுமக்கள்,சட்டத்தரணிகள் எனப் பலரும் நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்துள்ளனர்.

4 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் நான்கு மணி தாண்டியும் தீர்ப்பு வரவில்லை என பொதுமக்கள் சமூக வலைகளில் பதிவிட்டு வருவது காணக்கூடியதாக உள்ளது.

அதேவேளை சற்றுமுன் 4:23 மணி அளவில் நீதிபதிகள் வருகை தந்ததாகவும், நீதிமன்ற அறை எண் 502 இல் இது தொடர்பில் வழக்கு நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணி 4 பிந்திட்டு... இன்னும் தீர்ப்பு வரல்ல... மணி 4 பிந்திட்டு... இன்னும் தீர்ப்பு வரல்ல... Reviewed by Madawala News on December 13, 2018 Rating: 5