அமைச்சரவையை 35-40 வரை அதிகரிக்க மந்திராலோசனை..



19ம் சீர்த்திருத்தத்திற்கு அமைவாக அமைச்சரவை 30 உறுப்பினர்களை தாண்டி செல்லமுடியாது.
இந்த நிலையில் தற்போது அமைச்சரவையை நியமிப்பது தொடர்பான  இழுபறி உச்ச நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவை அமைச்சுகளை பகிர்ந்தளித்த பின்னர் சுதந்திர கட்சியில் இருந்து அரசில் இணையவுள்ளவர்களுக்கு அமைச்சுகளை வழங்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை கருத்தில் கொண்டு அமைச்சரவை எண்ணிக்கை 
35-40 வரை அதிகரிக்க மந்திராலோசனை ஆரம்பமாகியுள்ளது.

முதல் கட்டமாக 25 பேர் வரையான அமைச்சர்களை நியமித்து பின்னர் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தேசிய அரசுக்கு சென்று பின்னர் அமைச்சரவை எண்ணிக்கையை 35-40 வரை அதிகரிக்க ஆலொசனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவையை 35-40 வரை அதிகரிக்க மந்திராலோசனை.. அமைச்சரவையை 35-40 வரை அதிகரிக்க மந்திராலோசனை.. Reviewed by Madawala News on December 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.