இலங்கையில் பிடிபட்ட 231 கிலோ ஹெ​ரோய்ன் தொடர்பில் சந்தேக நபர்கள் வெளியிட்ட தகவல்.


பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவால் பேருவளை - பலப்பிட்டிய கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட
ஹெ​ரோய்ன் தொகை இலங்கையில் விநியோகிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளமைத் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு ​கொண்டு வரப்பட்ட 231.54 கிலோகிராம் ஹெரோய்ன் தொகையானது 400 கிலோகிராம் ​ஹெரோய்ன் தொகையின் ஒரு தொகுதியென்றும்,இதில் மிகுதி 169 கிலோகிராம் ​ஹெரோய்ன் சீசெல்ஸ் மற்றும் டுபாய்க்கும் படகொன்றின் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக இந்த போதைப்பொருள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஹெரோய்ன் தொகையானது சர்வதேச கடற்பரப்பில் வைத்து, படகு மூலம் கிடைக்கப்பெற்றதாகவும் இந்த கடத்தல்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமிடையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் எதிர்வரும் நாட்களில் இந்தச் சம்பவம் ​தொடர்பில் பலர் கைதுசெய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் பிடிபட்ட 231 கிலோ ஹெ​ரோய்ன் தொடர்பில் சந்தேக நபர்கள் வெளியிட்ட தகவல். இலங்கையில் பிடிபட்ட 231 கிலோ ஹெ​ரோய்ன் தொடர்பில் சந்தேக நபர்கள் வெளியிட்ட தகவல். Reviewed by Madawala News on December 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.