தொடங்கியது ஐ பி.எல் ஏலம். லசித் மலிங்கவை மும்பை இந்தியன்ஸ் 2 கோடிக்கு எடுத்தது.


2019 இந்தியன் பிரீமியர் லீக்-கிற்கான ஏலம்  நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்தில் 351 வீரர்கள் வரை ஏலம் விடப்பட்டு உள்ளனர்.

எட்டு ஐபிஎல் அணிகளும் ஏலத்தில் பங்கேற்று உள்ளன. 

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்களை எடுக்க கடும் போட்டி நிலவுகிறது.


வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லஸ் பிராத்வெயிடை ரூ.5 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.


இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்ஸர் பட்டேல், ரூ 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.


தற்போது அவுஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும் இந்திய வீரரான ஹனும விகாரி்யை வாங்க கடும் போட்டி நிலவியது. ரூ. 50 லட்சத்தில் தொடங்கிய ஏலம் 2 கோடியில் முடிந்தது. 

அவரை வாங்க டெல்லி மற்றும் மும்பை அணிகள் அதிக ஆர்வம் காட்டின. இறுதியில் டெல்லி அணி அவரை சொந்தமாக்கியது.
ஏலத்தில் முதல் வீரராக மனோஜ் திவாரி பெயர் அறிவிக்கப்பட்டது. 

அவரது அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்கு ஏலம் தொடங்கியது.


இந்திய வீரர் அக்சர் பட்டேலை 5 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கிய நிலையில், குர்கீரத் சிங்-ஐ அடிப்படை விலை 50 லட்சத்திற்கு பெங்களூர் அணி வாங்கியது
இந்திய வீரர் யுவராஜ் சிங்கை யாரும் இதுவரை ஏலத்தில் வாங்கவில்லை.


இலங்கை வீரர் மலிங்காவை மும்பை அணி 2 கோடி கொடுத்து வாங்கியது.
தொடங்கியது ஐ பி.எல் ஏலம். லசித் மலிங்கவை மும்பை இந்தியன்ஸ் 2 கோடிக்கு எடுத்தது. தொடங்கியது ஐ பி.எல் ஏலம். லசித் மலிங்கவை மும்பை இந்தியன்ஸ் 2 கோடிக்கு எடுத்தது. Reviewed by Madawala News on December 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.