பாராளுமன்ற ஆயுள் முடியும் வரை மகிந்த ராஜபக்ச பிரதமர். நாங்களே அரசாங்கம். இதனை மாற்ற எவருக்கும் முடியாது .


இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை மகிந்த ராஜபக்சவே பிரதமராக
பதவி வகிப்பார் எனவும் அதனை எவராலும் மாற்ற முடியாது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய, சதித்திட்டத்தின் பங்காளி என்பதை இன்று நாட்டுக்கு தெளிவாக ஒப்புவித்துள்ளார்.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு கூட்டப்படும் தினத்தில் விஜித ஹேரத் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கின்றார். நிலையியல் கட்டளை சட்டம் இடைநிறுத்தப்படுகிறது.

தினேஷ் குணவர்தன இதற்கு எதிர்ப்பை வெளியிட்டார். நான் பேச அனுமதி கோரினேன். சிறிது நேரம் ஒலிவாங்கியை வழங்கி விட்டு அணைத்து விட்டனர்.

எமது தரப்புக்கு பேசுவதற்கு இடமளிக்கவில்லை. ஜனநாயகத்தின் அடிப்படை மூலதர்மத்தை கூட பின்பற்றவில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதாக கூறி கறுப்பு பட்டியை அணிந்து வந்திருந்தனர். கறுப்பு பட்டியில் ஜனநாயகம் என்ற வார்த்தை இருந்த போதிலும் சபாநாயகரிடம் ஜனநாயகம் இல்லை.

இப்படியான சபாநாயகர் ஒருவரது தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராக இருப்பதையிட்டு வெட்கப்படுகின்றோம்.

இதற்கு முன்னர் இருந்த சபாநாயகர்களின் தலைமையின் கீழ் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். கரு ஜயசூரிய சதித்திட்டத்தின் பங்காளியாக மாறிவிட்டார்.

இப்படியான சபாநாயகருடன் நாடாளுமன்றத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. இதனால் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கௌரவ நீதிமன்றம் இதற்கான வழி வகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நாடாளுமன்றத்தை சதித்திட்டத்தின் தளமாக மாற்றிக்கொண்டிருப்பார்களாயின் மக்கள் விரும்பும் நாடாளுமன்றத்தை ஏற்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும்.

வாக்குரிமையை பயன்படுத்த வழி வகுக்க வேண்டும். நாட்டுக்கு நாடாளுமன்ற தேர்தல் ஒன்று தேவை. நாடாளுமன்றத்தின் ஆயுள் முடியும் வரை மகிந்த ராஜபக்ச பிரதமர். நாங்களே அரசாங்கம். இதனை மாற்ற எவருக்கும் முடியாது எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற ஆயுள் முடியும் வரை மகிந்த ராஜபக்ச பிரதமர். நாங்களே அரசாங்கம். இதனை மாற்ற எவருக்கும் முடியாது . பாராளுமன்ற ஆயுள் முடியும் வரை மகிந்த ராஜபக்ச பிரதமர். நாங்களே அரசாங்கம். இதனை மாற்ற எவருக்கும் முடியாது . Reviewed by Madawala News on November 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.