கிழக்கில் ஏனைய சமுகங்களது பிரதேசத்தினையும் எமது தமிழ் பிரதேசத்தினை ஒப்பிட்டுப் பாக்கும்போது சிங்கப்புரும், சோமாலியா போன்று காட்சியளிக்கின்றது.


(அஷ்ரப் ஏ சமத்)
கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக எனக்கு வாக்களித்த மக்களுக்காக 11 விடயங்களை நான்
ஜனாதிபதியிடம் சமர்ப்பிததுள்ளேன்.

அவற்றுக்குள் ஆகக் குறைந்தது 30 வீதமாவது எனக்கு தரப்பட்ட  பிரதியமைச்சர் பதவிக்  காலத்திற்குள் செய்வேன்  வடக்கு கிழக்கு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நான் ஜனாதிபதியிடம் முன் வைத்த சில விடயங்களை அவர் அமுல்படுத்தித் தந்தார்.


அதில் முக்கியமாக புள்ளுமலை பாடசாலை காணி விடயம் பட்டிப்பலை தொழிற்சாலை விடயங்கள் ஆகும்.  ஏனைய சில காணிகள் விடுவிப்பு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் செய்து தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். 

வடக்கை விட கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மிகவும் துண்பத்திலும் கஸ்டத்திலும் கடன் தொல்லைகள் வாழ்வாதாரமற்றவர்களாக உள்ளனர் கிழக்கில் யுத்த்தினால் கணவர் மார்களை இழந்த 125ஆயிரம் மேற்பட்ட பெண்கள்  உள்ளனர்.


ரீ.என்.ஏ உரிமை  உரிமை போரட்டம் செய்து ஜ.தே.கட்சியின் தலைவர் ரணிலையே பாதுகாக்கினறனர். உண்மையாக அவர்களுக்கு வாக்களித்த மக்களது அடிப்படை பிரசச்pனைகளை அவர்கள் பார்க்கவில்லை  கடந்த 3 ரை வருட காலத்திற்குள் நமக்கு வாக்களித்த எமது பிரதேச ஏழை மக்களுக்கு நாம் எதனைச் செய்துள்ளோம். 


தற்போதைய காலகட்டத்தில் உரிமையைப் பெற்றுக் கொள்வதோடு  காணிப்பிரச்சினைஇ சிரைக் கைதிகள் விடுதலைஇ பெண்கள் வாழ்வாதாரப் பிரச்சினைஇ விசேட தேவையுடையோர்கள் பிரச்சினை, மீண்பிடி, விவசாயம் மற்றும் தொழில் வாய்ப்பு போன்ற பல பிரசச்pனைகளை கிழக்கில் செய்து கொடுத்தல் வேண்டும்.


  கிழக்கில் ஏனைய சமுகங்களது பிரதேசத்தினையும்  எமது தமிழ் பிரதேசத்தினை ஒப்பிட்டுப் பாக்கும்போது சிங்கப்புரும்,  சோமாலியா போன்று காட்சியளிக்கின்றது. கடன் தொல்லைகளாக தமிழ் மக்களது தமது காணிகளை விற்று தமது இருப்பிடங்களையும் இழந்து போகின்றனர்.


ரணில் கிழக்கில் பாரிய தொழிற்பேட்டை நிறுவதாகவும் தொழில் வழங்குவதாகவும் தெரிவித்தார். ஆகக்குறைநதது அவரினால் வாழைச்சேனை கடதாசி ஆலை ஓட்டுத் தொழிற்சாலையைக் கூட மீள ஆரம்பிக்க அவர் நடவடிக்கை எடுக்க வில்லை.


நான் ஒர் ஆசிரியராக இருந்து எவ்வித ஆயுதக் கலாச்சாரத்திலும் ஈடுபடாது புளோட் தலைவர் சித்தாத்தன் தனக்கு வாய்ப்பளித்தமைக்காகவே நான் பாராளுமன்ற உறுப்பிணராக எனது பிரதேச மக்கள் வாக்களித்தனர்.


அந்த மக்களுக்கு நான் ஏதாவது அபிவிருத்திகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் சுவாமிநாதான் மனே கனேசன் ஆகியோரிடமிருந்து 80 மில்லியன் ;ருபா பெற்று சில அபிவிருத்திகளை செய்துள்ளேன்.

ஆகவே தான் ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சினை பெற்றேன். ஏற்கனவே வடக்கு அபிவிருத்தி மற்றும் ஏனைய 8 மாகணங்களுக்கும் அபிவிருத்தி அமைச்சு இருந்து வந்தது கிழக்கு என அபிவிருத்தி அமைச்சு இருக்க வில்லை. எனவும் வியாழேந்திரன் அங்கு தெரிவித்தார்.
கிழக்கில் ஏனைய சமுகங்களது பிரதேசத்தினையும் எமது தமிழ் பிரதேசத்தினை ஒப்பிட்டுப் பாக்கும்போது சிங்கப்புரும், சோமாலியா போன்று காட்சியளிக்கின்றது. கிழக்கில் ஏனைய சமுகங்களது பிரதேசத்தினையும்  எமது தமிழ் பிரதேசத்தினை ஒப்பிட்டுப் பாக்கும்போது சிங்கப்புரும்,  சோமாலியா போன்று காட்சியளிக்கின்றது. Reviewed by Madawala News on November 06, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.