"தன்னைத்தானே தாக்கி காயப்படுத்தி கொள்ளை அடித்த" தம்புள்ளை வியாபாரி.


தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் கடந்த தினம் இடம்பெற்றதாக கூறப்பட்ட
4 லட்சம் ரூபாய் கொள்ளை, குறித்த வியாபாரியாலேயே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கலேவல - தேவஹுவ பகுதியைச் சேர்ந்த குறித்த வியாபாரி, தம்மை சிலர் தாக்கிவிட்டு தம்மிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டிருப்பதாக காவற்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனை அடுத்து அவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவரை யாரும் தாக்கவில்லை என்பதும், அவர் தமக்கு தாமே காயங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கொழும்பில் பல வணிகர்களுடன் தொடர்பு கொண்டவர் என்றும், அவ்வாறான கொழும்ப வணிகர் ஒருவரிடம் இருந்து பெற்றுக் கொண்ட 4 லட்சம் ரூபாவை அபகரித்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த கொள்ளை சம்பவத்தை சித்தரித்திருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
"தன்னைத்தானே தாக்கி காயப்படுத்தி கொள்ளை அடித்த" தம்புள்ளை வியாபாரி. "தன்னைத்தானே தாக்கி காயப்படுத்தி கொள்ளை அடித்த" தம்புள்ளை வியாபாரி. Reviewed by Madawala News on November 08, 2018 Rating: 5