புதிய அரசாங்கத்தை என்னால் விரைவில் அமைக்க முடியும்..



புதிய அரசாங்கத்தை என்னால் விரைவில் அமைக்க முடியும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதால் மீண்டுமொரு  நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்களிடம் போதிய உறுப்பினர்கள் உள்ளனர் எங்களால்  தொடர்ந்து செயற்பட முடியும் இதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு அரசியல் ஸ்திரதன்மை அவசியம்  என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க வலிமையான அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதே  எனது நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம் யூன்மாதத்திற்கு முன்னர் அனைத்து அரசியல் கட்சிகளின் இணக்கத்துடனும் தேர்தலை நடத்துவதற்கான பிரேரணையை முன்வைப்போம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நான் நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகித்துள்ளேன், பாராளுமன்றத்தின் மீது குண்டுவீசப்பட்டபோதும் நான் அங்கிருந்திருக்கின்றேன் எனினும் பாராளுமன்றம் இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றது இதுவே முதல்தடவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தை என்னால் விரைவில் அமைக்க முடியும்.. புதிய அரசாங்கத்தை என்னால் விரைவில் அமைக்க முடியும்.. Reviewed by Madawala News on November 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.