மீண்டும் ஒரு தடவை வசந்த சேனாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வந்தால் நாங்கள் கட்சியில் இருந்து விலகுவோம்.


அமைச்சர் வசந்த சேனாநாயக்க மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டால் ஐக்கிய தேசிய
கட்சியில் இருந்து தான் விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

நேற்று கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்று மத வழிபாட்டு நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

வசந்த சேனாநாயக்க மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய முயற்சித்ததாகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு தேவையில்லை என்பதால் அவரை மீண்டும் கட்சிக்கு எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பெரும்பான்மையற்ற அரசாங்கம் நாட்டில் இருப்பதால் வௌிநாடுகளில் இருந்து கிடைக்க இருந்த அனைத்து உதவிகள் மற்றும் கடன்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதேவேளை தேர்தல் நடத்துவதாக இருந்தால் அதற்கான ஒழுங்கு முறை இருப்பதாகவும், தனி நபர்களின் தேவைக்கு ஏற்ப அதனை நடத்த முடியாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
மீண்டும் ஒரு தடவை வசந்த சேனாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வந்தால் நாங்கள் கட்சியில் இருந்து விலகுவோம். மீண்டும் ஒரு தடவை வசந்த சேனாநாயக்க  ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வந்தால் நாங்கள் கட்சியில் இருந்து விலகுவோம். Reviewed by Madawala News on November 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.