நாடு முழுதும் 100 விகாரைகளை தாக்கி, பதற்றத்தை ஏற்படுத்த அமித் திட்டம் உற்பட பலவற்றை அம்பலப்படுத்தும் நாமல் குமார.


(எம்.எப்.எம்.பஸீர்)
கண்டி மாவட்டமெங்கும் பரவிய இன வன்முறைகள் தொடர்பில் கைதான மஹசொஹொன் பலகாய
தலைவன் அமித் வீரசிங்க, அப்போது முழு நாட்டிலும் பாரிய குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாக, பொலிஸ்
உளவாளியான நாமல் குமார தெரிவித்தார்.


அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் கைதான தினத்தில் நாட்டில் 100 விகாரைகள் மீது கல்வீச்சு தாக் குதல் நடாத்தி குழப்பத்தை ஏற்படுத்தவும், 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைத்து பள்ளிகளில் குண்டுகள், ஆயுதங்கள் இருப்பதாக கூறி பதற்றத்தை தோற்றுவிக்கவும் திட்டமி டப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.


கண்டி தெல்தெனிய திகன வன்முறைகள் தொடர்பில் கைதான மஹசொஹொன் பலகாய தலைவன் அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் 7 மாதங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ள நிலையில், பிணையில் வந்த அமித் வீரசிங்க ஊடகங்களுக்கு
தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கும் போதே நாமல் குமார இவற்றை வெளிப்படுத் தினார்.


கண்டி, தெல்தெனிய திகன பகுதிகளில் அரங்கேறிய இன வன்முறைகள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தனது வீட்டில் வைத்து தான் உட்பட 10 பேரைக் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்ட போதும் அன்றைய தினம் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டதாக அவ்வி வகாரத்தில் அமித் வீரசிங்க தெரிவித்திருந்தார்.

இதன் போது 11 ஆவதாக கைது செய்யப்பட்ட நபர், ஜனா திபதி மைத்திரி கோத்தா கொலை சதி குறித்த தக வல்களை வெளிப்படுத்திய நாமல் குமார் எனக் கூறிய அவர், அவரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா இடை நடுவே விடுவித்ததாக கூறியிருந்தார்.


இதற்கு பதிலளிக்கும் விதமாகவே நாமல் குமார மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கண்டி திகன இன வன்முறை தொடர்பில் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்ட அந்த இரவில் நாடளாவிய ரீதியில் 100 விகாரைகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருந்தார்.


இது குறித்து அவர் உள்ளிட்டோர் கலந்துரையாடும் போது மறு புறத்தில் என்னூடாக அந்த தகவல்களை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கேட்டுக்கொண்டி ருந்தார்.


அதே போன்று எம்மிடம் ஒரு குரல் பதிவு ஆதாரம் உள்ளது. அதாவது, அமித் வீரசிங்க அன்றைய இரவு | நாடளாவிய ரீதியில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்த
திட்டமிட்டார்.

முஸ்லிம் பள்ளிகளில் குண்டுகள், ஆயுதங்கள் உள்ளதாகவும் அவற்றை தாம் கண்டதாகவும் 119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கங்களுக்கு தகவல் கொடுத்து குழப்பம் ஏற்படுத்துவதே அந்த திட்ட மாகும்.


இது குறித்து நான் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலங்கள் வழங்கியிருக்கின்றேன். . அவசியம் ஏற்பட்டால் அந்த சாட்சிகளை ஊடகங்களுக்கு தரவும் தயாராக உள்ளேன்.

உண்மையில் அமித் வீரசிங்க நானும் அவரது வீட்டில் இருந்த போது தெல்தெனிய திகன வன்முறைகள் குறித்து கைது செய் யப்பட்டதாக கூறியிருந்தார். இதனை அவர் கூறத் தேவையில்லை . நானே கூறுவேன்.


ஆம் நான் அவரது வீட்டில் தான் இருந்தேன். இந்த கும்பலின் தகவல்களை வெளிப்படுத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா என்னையே உளவா ளியாக அனுப்பியிருந்தார்.

அங்கிருந்த வண்ணமே மேற்படி அனைத்து தகவல்க ளையும் வழங்கியிருந்தேன். இந் நிலையில் அமித்தின் வீட்டைச் சுற்றிவளைத்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் என்னையும்
சேர்த்துத் தான் கைது செய்து ஜீப்பில் ஏற்றினர். எனினும் அவர்களுக்கு என்னை தெரியாது.


அனைவரையும் அவர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலகவிடம் அழைத்துச் சென்ற போது அமித் உள்ளிட்ட 10 பேரையும் ஒரு வாகனத்தில் ஏற்றிய அவர் என்னை பிறிதொரு வாகனத்தில் ஏற்றி கைவிலங்கை அகற்றி என்னை விடுவித்தார். இது ஒன்றும் அமித் வீரசிங்க கூற வேண்டியதில்லை. நானே பல முறை கூறியிருக்கின்றேன் என்றார்.
நாடு முழுதும் 100 விகாரைகளை தாக்கி, பதற்றத்தை ஏற்படுத்த அமித் திட்டம் உற்பட பலவற்றை அம்பலப்படுத்தும் நாமல் குமார. நாடு முழுதும் 100 விகாரைகளை தாக்கி, பதற்றத்தை ஏற்படுத்த அமித் திட்டம் உற்பட பலவற்றை அம்பலப்படுத்தும் நாமல் குமார. Reviewed by Madawala News on November 02, 2018 Rating: 5