நபி பெருமானின் வாழ்க்கை முறை, தத்துவங்கள், கோட்பாடுகள், எம் அனைவரினதும் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு வழிகாட்டுகிறது.


மனித நேயத்திற்காக அர்ப்பணித்து குரோதத்தை இல்லா தொழிக்க சகலரும் திடசங்கற்பம் பூணுவது
அவசியம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மீலாதுன்நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேன விசேட    வாழ்த்துச்செய்தியில் நபிபெருமானாரின்போதனைகள் ஒரு மனிதர் மற்றவரைவிட இனத்தாலோ, சாதியாலோ, நிறத்தாலோ உயர்ந்தவர் அல்லர் என்ற மகோன்னத சமத்துவ கோட்பாட்டை அடிப்படையாககொண்டுள்ளன.

 அனைத்து மனிதர்களுக்கும் சமமான உரிமை கிடைக்கப்பெற வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் போதித்தார். தனது முழு வாழ்வையும் அடிமைச் சமூகத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்த நபி அவர்கள், சுரண்டலுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். தொழிலாளர்களின் வியர்வை காயும் முன்னரே அவர்களுக்கான கூலி குறைவின்றி கொடுக்கப்பட வேண்டுமென அவர் போதித்தார்.

அவர் தனது தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடித்த நற்பண்புகள் மற்றும் மனிதநேயத்திற்கான அவரது அர்ப்பணிப்புகள் ஆகியன மனிதர்களுக் கிடையில் பிரிவினைகளும் குரோதமும் வளர்ந்து காணப்படும் இக்காலத்தில் எம் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரியாக அமை கின்றன.
அனைத்து உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்த வேண்டுமென்ற நபி அவர்களின் தத்துவம் எம் அனைவரினதும் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு வழிகாட்டுவதாக அமையவேண்டுமென நபி அவர்களின் இந்த பிறந்த தினத்தில் நான் உளப்பூர்வமாக பிரார்த்திக்கின்றேன்.
இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினருக்கும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடி நிலவிய யுகத்தில் மனிதப் பெறுமானங்களையும் மனித நேயத்தையும் மேம்படுத்தும் முயற்சியில் நபிபெருமானார்  பங்களிப்பு  நல்கியவிதம்  அனைவருக்கும்  முன்னுதாரணம்  என  ஜனாதிபதி மேலும்  தெரிவித்துள்ளார்.
- ஜனாதிபதி ஊடகப்பிரிவு -


நபி பெருமானின் வாழ்க்கை முறை, தத்துவங்கள், கோட்பாடுகள், எம் அனைவரினதும் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு வழிகாட்டுகிறது.  நபி பெருமானின்  வாழ்க்கை முறை, தத்துவங்கள், கோட்பாடுகள், எம் அனைவரினதும் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு வழிகாட்டுகிறது. Reviewed by Madawala News on November 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.