வினைத்திறனாகாதா 'மிம்பர் ' எனும் ஊடகம்?


- எம்.எம்.ஏ.ஸமட்-
முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, அரசில்  உட்பட பல்வேறுபட்ட விடயங்கள் குறித்தான அபிலாஷைகள்,
தேவைகள், பிரச்சினைகள், கருத்துக்கள் என்பவற்றை வெளிக்கொணர்வதற்காக சமூகத்திற்கான அச்சு, இலத்திரனியல், இணையத்தள ஊடகங்கள் காணப்பட்டாலும் அவை வினைத்திறனுடனும், வினைத்திறனின்;றியும் செயற்பட்டாலும், வாராவாரம் முஸ்லிம்களை இஸ்லாம் மார்;க்கத்தின் வழியில் நெறிப்படுத்தி, அத்தூய நெறிப்படுத்தலின் வழியே சமூக, சமய, அரசியல், பொருளாதாரம், கல்வி, தொழில் என அத்தனை விடயங்களினதும் அன்றாட செயற்பாடுகளை இஸ்லாத்தின் சட்ட வரையறைக்குலிருந்து முன்னெடுப்பதற்கு முறைப்படுத்தி,  வழிகாட்டும் கருத்துக்களையும், அறிவுரைகளையும், விழிப்புணர்வுகளையும் மக்களிடையே முன்வைப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு  அறிமுகப்படுத்தப்பட்ட சக்திமிக்க ஊடகம்தான் பள்ளிவாசல்களிலுள்ள 'மிம்பர்;' மேடைகளாகும். இந்த மிம்பர்  மேடைகளிலிருந்து ஒலிக்கும் பேருரைகள் பயனுள்ளதாக அமைய வேண்டுமே தவிர, பயனற்றதாகவும், விமர்சனத்திற்குரியதாகவும் அமையக் கூடாது.



ஒரு சில பள்ளிவாசல்களின் மிம்பர் ஊடக மேடைகளிலிருந்து ஒலிக்கும் ஜும்ஆப் பேருரைகள் ஜும்ஆவுக்கு சமூகமளிக்கின்றவர்களை தூக்கத்தில் ஆழ்த்தி விடுவதைக் காண முடிகிறது. இந்த பேருரைகள்; இறைவனுக்குப் பயந்து நபி வழியில் வாழ்வியல் விடயங்களை முன்நகர்த்துவதற்;கும். சமூக மட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைய வேண்டும். ஆனால், அவ்வாறு அமைகிறதா என்றால் இல்லையென்ற பதிலைத்தான்; இஜ்ஜும்ஆவிற்கு சமூகமளித்தவர்களிடமிருந்து கேட்கக்கூடியதாகவுள்ளது.



மிம்பர் மேடை மிகவும் அவதானத்தோடு பயன்படுத்தப்பட வேண்டியதொரு சிறந்த இடமாகும். இச்சிறந்த இடத்தில், அடுக்கு மொழிகளோ,கலப்பு மொழிகளோ, நடிப்பு மொழிகளோ, கட்டுக்கதைகளோ, அழுவது போன்ற பாசாங்குகளோ ஜும்ஆப் பேருரையின் பயனைக் கெடுத்து விடலாம் எனக் கூறப்படுகிறது. இறை அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் சரியான வரலாற்றுச் சம்பவங்களை, உரிய ஆதாரங்களுடன் மேற்கோட் காட்டி, சந்தர்ப்பத்திற்கேட்ப, சுருக்கமாக பேருரைகள் அமைய வேண்டுமென  சுட்டிக்காட்டப்படுகிறது.


அத்துடன், ஜும்ஆ பேருரை நிகழ்த்தும் உலமாக்கள் தங்களது ஆற்றல்களையும், திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென ஆலோசனை வழங்கப்படுகிறது. ஏனெனில், ஒரு சில பேருரை வழங்கும் உலமாக்களிடையே மாக்க அறிவில் காணப்படும் ஆழமான திறன் சமகால நடப்புக்கள், பொதுவான விடயங்கள் தொடர்பில் காண முடியாதிருப்பதை அவர்களது குத்பா உரைகளில் அவதானிக்க முடிகிறது.



இதற்கு  அவர்கள் கற்றுக்கொண்ட மத்ரஸாக்களின் கலைத்திட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு மத்ரஸாவும் ஒவ்வொரு கலைத்திட்டத்தின் பிரகாரம் தங்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதானாலேயே சமூகத்தின் மத்தியில் கொள்கைப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. இதனால்தான,; இக்கட்டுரையாளர் உட்பட சமூகத்திலுள்ள பலர் இந்நாட்டிலுள்ள அனைத்து மத்ரஸாக்களிலும் ஒரே கலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.


பன்மொழி பாண்டியத்தியம், பரந்த வாசிப்பு, சமகால நிகழ்வுகள் போன்ற பல விடயங்கள் குறித்த அவதானம்  ஜும்ஆ பேருரை நிகழ்ந்துகின்ற உலமாக்களுக்கு தற்காலத்தில் அவசியமாகவுள்ளது. முழு வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக இருக்கின்ற குர்ஆனின் விஞ்ஞான, தத்துவ வசனங்கள் சமகால விஞ்ஞானிகளினதும், தத்துவாதிகளினதும் கண்டுபிடிப்புக்களினாலும் கூற்றுக்களினாலும் உண்மைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.


 குர்ஆன் கூறும் விஞ்ஞானம் தொடர்பிலோ அல்லது ஏனைய விடயங்கள் தொடர்பிலோ ஆய்வுத் தகவல்களினூடாக முன்வைக்கின்ற பேருரைகளாக ஜும்ஆ பேருரைகள் அமைவதில்லை என்பதை ஒரு உதாரணத்திற்குக் குறிப்பிட முடியும்,


ஏனெனில், 1438 வருடங்களுக்கு முன்னர்  இறப்பட்ட குர்ஆன் கூறிய விடயங்களை முன்னிலைப்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு விஞ்ஞானிகள் பல தகவல்களை வெளியிடுகின்றபோது அத்தகவல்கள் ஆச்சரியத்துடன் நோக்கப்படுகிறது. ஆனால்,  குர்ஆன் கூறும் விஞ்ஞானம் நம்மக்கள் மத்தியில் அறியப்படவில்லை. அவை தொடர்பில் எத்திவைக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.


இருப்பினும், சக்திமிக்க மிம்பர் மேடைகள் முஸ்லிம்களுக்கான சிறப்புமிக்க ஊடகமாக இருந்தும் அவை வினைத்திறனற்றதாக அல்லது பயனற்றதாக உபயோகப்படுத்து தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகமோ அல்லது உலமா சபையோ கவனத்திற்கொள்வதாகக் காண முடியவில்லை. சமூக ஒற்றுமையையும், சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய மிம்பர் ஊடக மேடைப் பேருரைகள் சமூகத்திற்குள் பிரிவினையையும், புதுப்புது குழப்பங்களையும் ஏற்படுத்தி வருவதை சுட்டிக்காட்டாமல் இருக்க இயலாது. இவை தவிர்க்கப்பட வேண்டுமானால் ஜும்ஆ பேருரைகள் கால நேரத்திற்கேற்ப வடிவமைக்கப்படுவதற்கான கட்டமைப்புக்கள் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

மிம்பர் மேடையும்; சமூக மாற்றமும்

இஸ்லாமியப் போதனைகளுக்காக அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள், இறுவெட்டுக்கள், தனிநபர்களினாலும், இயக்கங்களினாலும் இயக்கப்படுகின்ற பல இணைத்தளங்கள்; என தற்கால முஸ்லிம் சமூகத்தில் ஊடகங்கள் பல்கிப்பெருகிக்காணப்படுவதைக் காணலாம். ஆனால், இவையெல்லாவற்றிலும் சிறந்த ஊடகமாக இருப்பதுதான் அல்லாஹ் அமைத்துத் தந்த பள்ளிவாசல் மிம்பர் மேடைகளாகும்.


ஜும்ஆ பேருரை நிகழ்த்துகின்ற உலமாக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு அமானிதமாக மிம்பர் மேடைகள் கணிக்கப்படுகின்றன. மக்களை நேர்வழிப்படுத்துவதற்காக கிடைக்கப்பெற்ற அமானிதத்தைப் பாதுகாக்க வேண்டி பொறுப்பைச் சுமந்த சில உலமாக்கள்; தங்களது இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதற்காகவும், ஏனைய இயக்கங்களின் நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதற்காகவும், பிறரைத் தூசிப்பதற்காகவும், சர்ச்சைக்குரிய விடங்களை அரங்கேற்றி சமூகத்தில்; புதிய புதிய குழப்பங்களை தோற்றுவிப்பதற்காகவும் இம்மிம்பர் மேடைகளைப் பயன்படுத்துவதன் ஊடாக மிம்பர் ஊடக மேடையின்; நோக்கத்தையும், இலக்கையும் குழிதோன்றிப் புதைக்க முன்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.


வல்ல இறைவனதும், நபி (ஸல்) அவர்களினதும் செய்திகளை எடுத்துச் சொல்லி மக்களை நேர்வழியின்பால் விழிப்புணர்வூட்டி வாழவைக்க வாரத்தில் ஒரு நாள் அரை மணித்தியாலமோ அல்லது அதைவிடக் கூடிய நேரமோ பேருரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த மிம்பர் ஊடக மேடை நேரம் சமுகமளிக்கும் மக்களை நித்திரையில் ஆழ்த்துவதற்கும,; சிந்தனைச் சிதறல்களில் மனங்களை உலாவிடுவதற்கும், குழப்ப நிலையை அடைவதற்கும் வழிவகுப்பதை எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.



மிம்பர் ஊடக மேடை, இறை அச்சத்தை ஏற்படுத்தவும், ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கவும், பாவங்களிலிருந்து தவிர்ந்து வாழவும், சமூக மாற்றத்தை உருவாக்கவும் வித்திட வேண்டியது என்பது மறக்கப்பட்டு பிறரை ஏசித் திட்டித் தீர்க்கவும், கொள்கைகளைப் பரப்பவும், மக்களைக் குழப்பவும் கூடிய ஊடக மேடையாக தொடர்ந்து மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.



நல்ல மனப்பாங்குகளை உருவாக்க வேண்டிய மிம்பர் ஊடக மேடை தனது கொள்கை சாராதவர்களை எதிரிகளாக நோக்;கத் தூண்டுமிடமாகவும் ஒரு சில உலமாக்களால் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது கவலையோடு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். இச்செயற்பாடுகள் ஜும்ஆவிற்கு சமுகமளிப்போரின் நேரத்தை வீணடிப்பது மாத்திரமின்றி, எவ்வித விழிப்புணர்வுகளையும், பயன்களையும் பெற்றுக்கொள்ளாது திரும்பிச் செல்லும் நிலையை உருவாக்குவதை ஜும்ஆ பேருரை நிகழ்த்தும் குறித்த உலமாக்கள் புரிந்து செயற்பட வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.



உள்ளங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு நபி (ஸல்) அவர்களுக்கு உதவியது மிம்பர் மேடைதான் எனக் கூறப்படுகிறது. எதிர்மறை மனப்பாங்கு கொண்டோரை, நேர்மய மனப்பாங்கு கொண்டோராக மாற்றியதும் இம்மேடைதான். இறைதூதர் அவர்கள் மிம்பர் மேடையைப் பயன்படுத்திய முறைதான் அவர்களுக்குத் துணைநின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.. மிம்பர் மேடை எனும் சிறப்புமிக்க ஊடகம், அதிலின்று நிகழ்;ந்தப்படும் சிறப்புரைகளின் மூலம் அலங்கரிக்கப்படுகிறது. இம்மேடை கொள்கைகளைப் பரப்புவதற்கு, பிற கொள்கைவாதிகளை போட்டுத்தள்ளுவதற்கு, புதிய புதிய குழப்பங்கனை தோற்றுவிப்பதற்கு வழங்கப்பட்டதல்ல.



மாறாக, சமூகத்தின் மத்தியில் பல்வேறு பெயர்களில் கரைபுரலும் வட்டி, விபச்சாரம், வர்த்த மோசடி, போதைப் பொருள், மதுபானை, நம்பிக்கைத்துரோகம், பொய், களவு, பொறாமை, பெறுமை, வீண்விரையம், பாதைகளினதும்; அண்டை வீட்டாரினதும் உரிமை மீறல்கள், அமானிதம் பேணாமை என மலிந்து கிடக்கின்ற பாவச் செயல்களிலிருந்து தவிர்;ந்து நடக்க அவர்களின் மனப்பாங்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இறை அச்சத்தோடு நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் வாழ்வியல் விடயங்களை எடுத்துச் செல்வதற்கான சிறப்பு மிக்க ஊடக மேடையாக மிம்பர் மேடைகள் மாற்றப்பட வேண்டும்.


அதனால், இம்மிம்பர் மேடையிலிருந்து ஒலிக்கும் பேருரைகள் அனைத்தும் பயன்மிக்கதாக அமைய வேண்டும் என்பதில் இம்மேடையிலிருந்து பேருரைகளை நிகழ்த்துவோர் கரிசனை காட்ட வேண்டியது காலத்தின் தேவையெனச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.


ஏனெனில், சமூகத்திலுள்ள இளைஞர்களும,; யுவதிகளும் மாற்று ஊடகங்களின் தாக்கங்களினாலும் நவீன தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டினாலும்  வழிதவறிப் போய்கொண்டிருக்கிறார்கள்.;   அவர்களில் சிலரின் செயற்பாடுகள் சமூகத்திற்கு தலைக்குணிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன, மாற்று சமூகத்தினரால் இஸ்லாத்தின் வழிகாட்டல்களிலும் கேள்விக் கணைகளை எழுப்பி நிற்கின்றன. இவ்வாறான சூழலில் வாரவாரம் இம்மிம்பர் மேடைகளலிருந்து நிகழ்த்தப்படும் ஜும்ஆப் பேருரைகள் சிந்தனைகளிலும், மக்களின் மனப்பாங்குகளிலும், செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.



வாராத்திற் ஒரு நாள் ஒரு மணி நேரம் அல்லது அதைவிடக் குறைவான நேரத்தில் வாழ்க்கை; நெறிக்கான அத்தனை விடயங்களையும் முன்வைக்க முடியாது. என்றாலும், கிடைக்கின்ற நேரத்தை பழைய சரித்திரங்களைப்; பாடாது, சமூகத்தைக் குழப்பாது, சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தவும், சமூக மாற்றத்தை உருவாக்கவும் உதவக்கூடிய சந்தர்ப்பமாகவும், நேரமாகவும் மாற்றுவதற்கு மிம்பர் மேடை என்ற சிறப்பான ஊடகத்தை பயன்படுத்தும் உலமாக்கள் அல்லாஹ்வுக்கு பயன்தவர்களாக இறைதூரர் பயன்படுத்திய முறையில் பயன்படுத்துவதற்கு முனைய வேண்டுமென்பது பலரது கோரிக்கையாகும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது,



பள்ளிவாசல்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் சமூக மாற்றம், சன்மார்க்கத் தெளிவு என்பன உலமாக்கள் மூலமேயன்றி வேறு எந்த வழியினாலுமல்ல என்பது நிதர்சனம். அந்த உண்மையை நிலைநாட்டத்தவறும் ஒரு சில உலமாக்கள் நபி (ஸல்) அவர்கள் ஏறிய இடமான மிம்பர் மேடையின்  கண்ணியத்தையும், இதன் நோக்கத்தையும் மறந்து தங்களது உரைகளை  நிகழ்த்துவதுதான் கவலைக்குரிய விடயமாகவுள்ளது.


மக்கள்  ஒருவருடன் ஒருவர் பேசாது அமைதியாக இருந்து காது தாழ்த்திக் கேற்கும் ஓர் உரையான மிம்பர் ஊடக மேடையிலிருந்து ஒலிக்கும் ஜும்ஆப் பேருரைகளை வினைத்திறனுடையதாக மாற்ற வேண்டிய பொறுப்பு பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினுடையது என்பதும் சுட்டிக்காட்ட வேண்டியதாகும்.


பள்ளிவாசல்களும் நிர்வாகிகளும்

பள்ளிவாசல்கள் என்;பது புனித தலமாகும். 9.71 வீதம் முஸ்லிம்கள் வாழும் இலங்கையில் 2000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. சிறிய, பெரிய பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், ஸாவியாக்கள், மர்கஸ்கள் என ஒரு மாடி, இரு மாடி, என மாடிகளாகப் பள்ளிவாசல்கள்; காணப்பட்டாலும், தொழுவதற்கும் ஏனைய ஆகுமாக்கப்பட்ட விடயங்களை புரிவதற்கும் இப்பள்ளிவாசல்களில் ஆட்கள் இல்லை என்பதும் சமகாலத்தில் அவதானிக்கக் கூடிய விடயங்களாகும்.


இப்பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றும் தனக்கென அமைத்துக்கொண்ட முறையில் நிர்வகிக்கப்படுகின்றன. இருப்பினும், மஸ்ஜித் என்று வக்பு செய்யப்பட்ட பள்ளிவாசல்கள் சகல முஸ்லிம்களுக்கும் உரித்தானது. அதில் உரிமை கொண்டாடவோ, அதிகாரம் செலுத்தவோ எவருக்கும் முடியாது என்பது ஷரீயாச் சட்ட விதியாகும் எனக் கூறப்படுகிறது.


ஆனால், ஒரு சில பள்ளிவாசல்கள் இயக்க ரீதியாக, ஜமாத் ரீதியாக உரிமைகோரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு ஏகபோக உரிமையோடு பள்ளிவாசல்கள் பயன்படுத்தப்படுவது சமூகத்தில்; பல பிரச்சினைகள் உருவாக்குவதற்கு வித்திடுவதையும் அவதானிக்கலாம்.
அத்துடன், பள்ளிவாசல்கள் எப்போதும் உள்ளத்தில் அடக்கத்தையும், இறை அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டும். ஆனால், தற்காலத்தில் பள்ளிவாசல்கள் பல மாடிகளாகக் கட்டப்பட்டும் பல வர்ணங்களாலும், மின்விளக்குகளாலும் தேவைக்கதிகமாக அலங்கரிக்கப்பட்டும் காணப்படுவது உள்ளத்தில் இறை அச்சத்தை இல்லாமல் செய்வதாக கூறப்படுகிறது. 'இறுதி நாள் அடையாளங்களைச் சேர்ந்ததே மனிதர்கள் பள்ளிவாசல்களைக் கட்டி பெருமை பேசுவது' என்றும் 'நிச்சயமாக யூத கிறிஸ்தவர்கள் போன்று நீங்கள் பள்ளிவசால்களை அலங்கரிப்பீர்கள்' என்றும் நபி (ஸல்) அவர்களின் அருள்வாக்கு உள்ளதை அபூதாவூத் ஹதிஸ் கிரந்தத்தில் பதிவாகியிருப்பதைக் காண முடிகிறது.


பள்ளிவாசல்கள் தொழுகைக்குரிய இடமாக மாத்திரமின்றி தீனொளி பரப்பும் இடமாக, ஒற்றுமைக்கு வித்திடும் இடமாகவும் இன்னும் என்னென்ன விடயங்கள் ஆகுமாக்கப்பட்ட விடயங்களாக இருக்கிறதோ அத்தனை விடயங்களும் பள்ளிவாசல்களின் புனிதத்தையும,; கன்னியத்தையும், சிறப்பையும் பாதிக்காதவிதத்தில் நடந்தேறுவதற்கு நிர்வாகம் வழியிட வேண்டும்.


பெறுமைக்காக கட்டப்பட்ட பல பள்ளிவாசல்களில் அடுக்கு மாடிகள் இருந்தும் அவற்றில் ஐங்காலத் தொழுகையில் குறிப்பாக ஸுபஹுத் தொழுகைக்கு ஒரு ஸப்புக்குக் கூட ஆட்கள் இல்லாத நிலையை தலைநகரங்களில் காண முடிகிறது. இரவு 10 மணிக்கு இழுத்து மூடப்படும் பள்ளிவசால்கள் அதிகாலை 4 மணிக்கு பின்னரே திறக்கப்படுகின்றன.


நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த மக்களின் தொகைக்கேற்ப பள்ளிவாசல்களின் பங்களிப்பு பரந்து காணப்பட்டது. இஸ்லாத்தில் சேர விரும்பி வருவோரை அல்லது ஏதேனும் உடன்படிக்கை செய்துகொள்ள வருவோரை வரவேற்கும் இடமாக பள்ளிவாசல்கள் இருந்திருக்கின்றன. எந்த வசதியுமற்ற  மக்கள் தங்கி நிற்குமிடமாக பள்ளிவாசல்கள் அமைந்திருந்ததன. இவ்வாறு பல்வேறு விடயங்களுக்காக பள்ளிவசால்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதிலிருந்து பள்ளிவாசல்களின் சமூகப் பங்களிப்பு மிக விசாலமானணது என்பதை அறிய முடிகிறது.


இப்பள்ளிவாசல்கள் கல்வி கற்ற போதிய வசதிகளில்லாத மாணவர்கள் ஒழுக்க விழிமியத்துடன் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முறையான மேற்பார்iவியின் கீழ் வசதியளிப்பதன் மூலம் இப்பள்ளிவாசல்கள் சமூகத் தேவைக்கு பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஏனெனில், நபி(ஸல்)அவர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல் கல்விக் கூடமாக இருந்துள்ளது. அது மாத்திரமின்றி பள்ளிவாசல்கள் வழிகாட்டும் நிலையமாக என பல்வேறு தேவைகளுக்கு அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பள்ளிவசால்கள் இன்று தொழுகைக்காகவும், அவர் அவர் கொள்கை சார்ந்த விடயங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.


'பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கென்றே நிர்மானிக்கப்படுகின்றன' என்ற குர்ஆனின் வசனம் எடுத்தியம்பும் போதனையை நிலைநிறுத்த பள்ளிவாசல்களை நிர்வகிப்பவர்கள் இறை அச்சம் கொண்டவர்களாக திகழ வேண்டும்.


'எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசித்து, தொழுகையையும் கடைபிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கின்றார்களோ அவர்கள் தாம் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களை நிர்வகிக்க தகுதியுடையவர்கள். (முஃமினான) இத்தகையவர்களே நேரான வழியிலிருப்பார்கள'; (அல்குர்ஆன் 9:18) என அல்குர்ஆன் பள்ளிவாசல் நிர்வாகிகளின் தமைமை குறித்து போதிக்கிறது.


 அல்லாஹ் கட்டளையிட்டுள்ள இத்தகைய தகுதியுடையவர்களினால்தான் பள்ளிவாசலை சிறப்பா நிர்வகிக்க முடியும். அல்லாஹ்வின் வீட்டை நிர்வகிக்க தெரிவு செய்யப்படுகின்றவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாக நடக்கவும், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டல்களுக்கு முரணாகச் செயற்படவும் முடியாது.


ஆனால், நாட்டிலுள்ள 2000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை நிர்வகிக்கின்றவர்கள். நிர்வகிக்க உள்ளவர்கள் அல்லாஹ்  ரஸுல் வகுத்த தகைமைகளில் எத்தனை  தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள் என்பதை பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் அவரவர் மனட்சாட்சியிடம் கேட்டால் விடைகிடைக்கும்.

அல்லாஹ்வும், ரஸுல் (ஸல்) அவர்களும் விதித்துள்ள தகைமைகளைக் கொண்டிராத பலரினால் பள்ளிவாசல்கள் நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதனால்தான் இப்பள்ளிவாசல்கள் அரசியல்வாதிகளினதும், ஏனையவர்களினதும் ஊடுறுவர்களுக்குள்ளாகி அதன் புனிதம் மாசுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. பிரச்சினைகளுக்கும், சமூகக் குழப்பங்களும் உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருப்பதை காண முடிகிறது.
 இதனால், பள்ளிசால்களிலுள்ள மிம்பர் ஊடக மேடைகளில் ஒலிக்கும் பேருரைகள் வரையறை செய்யப்படாது நிகழத்தப்படுவதனால் வினைத்திறனற்றதாக்கப்படுகிறது. மிம்பர் ஊடக மேடை முஸ்லிம்களுக்கான சிறந்த ஊடகமாக மாற்றப்பட வேண்டுமானல், பள்ளிவசால்கள் வல்ல இறைவன் வகுத்த தகைமையுடையோரினால் நிர்வகிகக்ப்படுவதோடு, காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற வகையிலும், திட்டமிட்ட அடிப்படையிலும்,; இரத்தினச் சுருக்கமாகவும், சிந்தனை மாற்றத்தையும், சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடிய உலமாக்களால் இக்குத்பா பேருரைகள் மிம்பர் ஊடக மேடைகளிலிருந்து ஒலிக்கப்பட வேண்டும். அதனூடாக சிறப்புமிக்க மிம்பர்  மேடை முஸ்லிம்களுக்கான  உன்னதமான ஊடகமாக வினைத்திறனாக்கப்படும்.

இறைவன் வகுத்த தகுதியுடையோரினால்  நிர்வகிக்கப்படுகின்ற பள்ளிவாசல்களில் தொழுகை உள்ளிட்ட இறை கடமைகளை நிறைவேற்றவும் சிறந்த குத்பா பேருரைளைக் கேட்டு பயனடையவும் வல்ல இறைவன் என்றென்றும் துணைபுரிவானாக!
வினைத்திறனாகாதா 'மிம்பர் ' எனும் ஊடகம்? வினைத்திறனாகாதா  'மிம்பர் ' எனும்  ஊடகம்? Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.