மீடியாகோப் ஊடகவியலாளர்க்கான பல்ஊடக பயிற்சிப்பட்டறை.


ஜே.எப்.காமிலா பேகம்- 
மீடியா கோப் நிறுவனத்தினால் கடந்த வாரம்,புத்தாய்வு புலமை பரிசிலுற்கு தெரிவு செய்யப்பட்ட
பல் ஊடக ஊடகவியலாளர்களுக்கான 3 நாள் பயிற்சிப்பட்டறை, ராஜகிரிய "ஒபியுலன்ட் ரிவர்பேஸ்" ஹோட்டலில் இடம் பெற்றது.


பல ஊடகவியலாளர்கள் விண்ணப்பித்திருப்பினும் பயிற்சிக்கு தகுதி வாய்ந்த சுமார் 36 பல்ஊடக ஊடகவியலாளர் பல்ஊடக செய்தி தயாரிப்பாளர்,டிஜிடல் ஊடக செயற்பாட்டாளர்கள்,குறும்படம் தயாரிப்போர்,மற்றும் இணையவழி நிருபர்கள் போன்ற தகுதிகளின் கீழ் புத்தாய்வு பரிசிற்கு தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.பல ஊடக செய்தி உருவாக்கம் மற்றும் சமரசத்தை வழுப்படுத்தல் என்பவற்றில் பரந்த ஒருமுனை நோக்கு என்ற அடிப்படையில்,  மொகமட் அசார்,கபில ராமநாயக்க,எம்.சி.ரஸ்மின்,எம்.ஜ. ஆர்.டேவிட்,ஏ.தீபாஞ்சலி,அ.ருவான் போன்ற வளவாளர்களினால் பயிற்சிகள்வழங்கப்பட்டன.


மீடியா கோப் என்பது இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம் (stjf),மற்றும் பரிமாற்றத்துக்கான சர்வதேச சபை(IREX)  அமைப்புடனான கூட்டாண்மையுடன்  USAID நிறுவனத்தின் உதவியினால் உருவாக்கிய புத்தாக்க அணுகு முறை ஆகும்.இப்பயிற்சியில் வேறுபட்ட நம்பிக்கைகள்,இன மற்றும் மொழி பின்புலங்களை கொண்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட,யுத்தத்திற்கு பின்னரான அத்துடன் ஓரங்கட்டப்பட்ட  ,சூழ்நிலையில் வருகை தந்த,இளம் ஊடகவியலாளர்களே தெரிவு செய்யப்பட்டு சோடிகளாக ஆக்கப்பட்டு,பரஸ்பர சூல்நிலைகளில் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.இது பாதிக்கப்பட்ட சமூகங்களிடையே ஆரோக்கியமான உறவை பாதிக்கும் விடயங்கள் பற்றிஆழ்ந்த புரிதலை பெற்று, சமரசத்தை உறுதியாக்கும் நோக்கில் பல்ஊடகசெய்திகளை (கட்டுரை /குறும்படங்களை) பல ஊடகம் ஊடாக தயாரிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒரு அணுகு முறை ஆகும்.


மீடியா கோப் தொடர் செயன்முறை பிரதிபலிப்புக்கான தளத்தை வழங்குவதுடன், இது வரை இலங்கையில்  வேறு எந்த ஊடகவியலாளர் பயிற்சியிலும் வழங்கப்படாத,பயிற்சியாக இவ்வதிவிட பயிற்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இளம் ஊடகவியலாளர்கள் தமது விழுமிய முறைமை பற்றி நெருக்கமாக நோக்குவதற்க்கும், தமது சொந்த சமூகம் அல்லாத ஒன்றை பற்றி புரிந்து கொள்ளவும் இப்புலமை பரிசில் பயிற்சி உதவியாக இருக்கும் என்பதில், எவ்வித  சந்தேகமும் இல்லை என்பது, குறிப்பிடத்தக்க ஒரு விடயமும் ஆகும்.
மீடியாகோப் ஊடகவியலாளர்க்கான பல்ஊடக பயிற்சிப்பட்டறை.  மீடியாகோப் ஊடகவியலாளர்க்கான பல்ஊடக பயிற்சிப்பட்டறை. Reviewed by Madawala News on November 08, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.