புனர்வாழ்வு, புனரமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்படும்.. பதவியேற்ற பிரதியமைச்சர் காதர் மஸ்தான்.யுத்தத்தால்  பாதிக்கப்பட்ட மக்களின் நஷ்டஈட்டுக்  கொடுப்பனவுகள் விரைவுபடுத்தப்பட்டு பூர்த்தி
செய்யப்படும் யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கழிந்தபோதும் நஷ்டஈடு வழங்கும் பணிகள் இன்னும் முடியடையவில்லை என்பதை நாம் சிரத்தில் கொண்டு பணியாற்றுகிறோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் தெரிவித்தார்.

இன்று புனர்வாழ்வு அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு  விளக்கமளிக்கும் பொழுதே அவர் இக்கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது
இது தொடர்பாக எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சு செயலாளர் சிவஞானசோதி மற்றும் பிரதி அமைச்சரான நானும் இது தொடர்பில் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டு வருகிறோம்.

இதற்காக திட்டவரைபுகளை தயாரித்து உரிய பணிப்புகரைகளை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளோம்.

மேலும்,25000 வீடுகளை அமைக்கும் எமது நடவடிக்கையின் முதற்கட்டமாக உடனடியாக சுமார் 15000 வீடுகளை இம்மாதமே நிர்மானப் பணிகளை தொடங்கி அதனை கட்டுவதற்கு தீர்மானித்துள்ள அதேவேளை உள்நாட்டில் இடம்பெயரந்தவர்கள்,இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பியவர்கள்,நலன்புரி நிலையங்களில் வாழ்வோர்,புனர்வாழ்வு அளிக்கப்பட்டோர்,பெண் தலைமைத்துவஙகளை கொண்ட குடும்பங்கள் போன்ற விடயங்களை பிரதானமாக உள்வாங்கி பயனாளிகளை தெரிவு செய்து வீடுகளை வழங்க தீர்மானித்துள்ளோம்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக கட்சியில் தாம் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் அதன் மூலம் தனது அமைச்சு அதிகாரங்களை பாவித்து மக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல இருப்பதாவும் பிரதி அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் குறிப்பிட்டார்.

ஊடகப்பிரிவு.
புனர்வாழ்வு, புனரமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்படும்.. பதவியேற்ற பிரதியமைச்சர் காதர் மஸ்தான். புனர்வாழ்வு, புனரமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்படும்.. பதவியேற்ற பிரதியமைச்சர் காதர் மஸ்தான். Reviewed by Madawala News on November 08, 2018 Rating: 5