புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஓமான் அரசாங்கம் மற்றும் பாலஸ்தீனிய அரசாங்கம் வாழ்த்து!


பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஓமான் அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.


புதிய  பிரதமரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஓமான் அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும் என இலங்கையில் அமைந்துள்ள ஓமான் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதனுடன் இரு நாடுகளின் உறவுகளை மேலும் விரிவுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாலஸ்தீனிய அரசாங்கமும் அறிக்கையொன்றை வெளியிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இலங்கையின் சமாதானம், செழிப்பு மற்றும் அபிவிருத்திக்காக ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஓமான் அரசாங்கம் மற்றும் பாலஸ்தீனிய அரசாங்கம் வாழ்த்து! புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஓமான் அரசாங்கம் மற்றும் பாலஸ்தீனிய அரசாங்கம் வாழ்த்து! Reviewed by Madawala News on November 01, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.