பாராளுமன்ற சம்பிரதாயங்களை தவிடுபொடியாக்கும்போது எங்களால் அமைதி காக்க முடியாது.(மொஹொமட்  ஆஸிக்)
பாராளுமன்ற சம்பிரதாயங்கனை தூசியாக ஆக்கும்போது எங்களுக்கு அமைதி காக்க முடியாது என்று கண்டி
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


நேற்று 18 ம் திகதி கண்டி பூஜாபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றபொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைதெரிவித்தார்.


இங்குமேலும் கருத்துதெரிவித்த அவர் இவ்வாறும் கூறினார்.

 கடந்த சில தினங்களில் பாராளுமன்றத்தில்  ஏற்பட்டுவரும் சம்பவங்கள்தொடர்பாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களை திட்டுகின்றனர். இருந்தபோதும் அங்கு திரைக்கு பின்னால் நடப்பவை பற்றி மக்கள் அறிந்திருக்க வில்லை.


பாராளுமன்ற சம்பிரதாயப்படி  பாராளுமன்றம் கூடுவதற்கு முன் கட்சி தலைவர்களது கூட்டம் இடம் பெற வேண்டும் அங்கு அன்றைய தினத்தின் சபையின் நடவடிக்கைகள் பற்றி சபாநபயகர் மற்றும் அரச தரப்பினரே முடிவுசெய்யவேண்டும்.  இப் பிரச்சினை ஏற்பட்ட தினங்களில் அரச தரப்பு நாங்கள் . பிரதமரும் அமைச்சரவையும் எங்களதாகவே  இருக்கின்றது 


இருந்தபோதும்   சபாநாயகர்  எங்களது கருத்தின் படி சபையின நிகழ்ச்சி நிரலை தயாரிக்க வில்லை.

ஐக்கிய தேசிய கட்சியினதும்  அவர்களை சார்ந்தவர்களினதும் தேவைக்காக சபாநாயகர் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டார்.  பாராளுமன்ற சம்பிரதாயங்கள்தூசியாக ஆக்கும் போது எங்களால் மேலும் அமைதி காக்க முடிய வில்லை.அதற்காக நாங்கள்  எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த நாங்கள்மேற்கொண்ட முறை சரியா என்றகேல்வி எழுந்தபோதும் எங்களுக்கு வேரு வழிகள் எதுவும் இருக்க வில்லை.


சபாநாயகர் நம்பிக்கை இல்லாப் பிரேரனைகள் தொடர்பாக இதற்கு முன் நடந்து கொண்டுள்ள முறைகள் பற்றி பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருநாயாக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனையை 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் 24 ம் திகதிகொண்டு வந்தபோதும் அதனை இரண்டரை மாதங்களுக்கு பின்  2016 ஜூன் மாதமே விவாதிக்கப்பட்டது.


சுகாதார அமைச்சர் ராஜித்தசேனாரத்னவுக்கு  எதிராக  2107 ஆகஸ்ட் 17 ம் திகதிகொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனையை இன்று வரை விவாதத் திற்கு எடுத்துக் கொள்ள வில்லை.வெளிவிவகார அமைச்சர் ரவிக்கு எதிராக இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரனையை 2017 ஆகஸ்ட் மூன்றாம் திகதி முன்வைத்தபோதும் அவர்  இராஜினாமா செய்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனயை  2015  மார்ச் மாதம் 21 ம் திகதி முன் வைக்கப்பட்டதுடன் 2015 ஏப்ரல் மாதம் இரண்டு கிழமைகளுக்கு பின் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு  எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையை  2018 நவம்பர் 14 ம் திகதி முன்வைத்து  எவ்வித விவாதமும் இன்றி 10 நிமிடங்களுக்கு பின் வாக்கெடுப்பு நடாத்தியது எந்த வகையில் நியாயம் என்பதை நான் மக்களிடம் கேட்க விரும்புகின்றேன்.


ஏனென்றால் பாராளுமன்றத்தில் நடக்கும் விடயங்களில் திரை மறைவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் என்றும் அவர்தெரிவித்தார். எது  எவ்வாறு இருந்தாலும்  ஜனநாயகத்தை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் இங்குதெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம உற்படமேலும் சிலரும் இங்கு உரையாற்றினர்.

2018 11 18 ஆஸிக்

பாராளுமன்ற சம்பிரதாயங்களை தவிடுபொடியாக்கும்போது எங்களால் அமைதி காக்க முடியாது. பாராளுமன்ற சம்பிரதாயங்களை  தவிடுபொடியாக்கும்போது   எங்களால் அமைதி காக்க முடியாது. Reviewed by Madawala News on November 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.