UNP யும் TNA யும் இணைந்து ரணிலைப் பிரதமராக்குங்கள் என்று 113பேர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினால் உடனே ஜனாதிபதி ரணிலை பிரதமராக நியமித்தே ஆகவேண்டும்..!




ரணிலிடம் உள்ளது 104 உறுப்பினர்கள்தான் என்கின்றபோது மீதி உறுப்பினர்களை தமிழ் கட்சிகள்
வழங்க வேண்டும்.  தமிழ் கட்சியும், ஜே.வி.பியும் மஹிந்த ஆட்சிக்கு எதிராகத்தான் வாக்களித்தார்களே தவிர ரணிலை பிரதமராக்குங்கள் என்று கையொப்பம் இடவில்லை.

அதைத்தான் ஜனாதிபதி சொல்லுகிறார் 113பேர் கையொப்பம் இட்டு ரணிலைப் பிரதமராக்குங்கள் என்று கூறிய கடிதத்தை கொண்டு வாருங்கள் என்கிறார்.

அப்படியான நிலை வரும்போது தமிழ் கட்சியும் ஜே.வி.பியும்  ரணிலைப் பிரதமராக்குங்கள் என்று ஒப்பமிட மாட்டார்கள். அப்படி அவர்கள் ஒப்பமிட்டால் அவர்கள் அனைபேரும் ஆளுங்கட்சியாக சட்டப்படி மாறவேண்டியிருக்கும். அப்படி ஆட்சியமைந்தால் தமிழ் கட்சியும் ஜே.வி.பியும். ஐ.தே.கட்சியும் இணைந்த ஆட்சியாக அது கருதப்படும். இதற்கு ஜே.வி.பி விரும்பபோவதில்லை,

அதே நேரம் தமிழ் கட்சியும் ஐ.தே.கட்சியும் இணைந்த ஆட்சியை சிங்கள மக்கள் சந்தேக கண்கொண்டு பார்த்தால் அது ஐ.தே.கட்சியையும் பாதிக்கும், அதே நேரம் தமிழ் மக்களும் தமிழ் தலைவர்களிடம் நேரடித் தீர்வை எதிர்பார்ப்பார்கள். உங்கள் ஆட்சிதானே நடக்கிறது அப்படியென்றால் தமிழர்களின் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுத்தாருங்கள் என்று கேட்பார்கள். அந்தக்கேள்விக்கு சம்பந்தனாலோ அல்லது சுமேந்திரனாலோ பதில் கூறமுடியாத நிலைமை ஏற்படும். அந்த நிலைமை ஏற்பட்டால் தமிழ் தரப்பினர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.  அதனால்தான் அவர்களும் நேரடியாக ரணிலின் ஆட்சியோடு சேரப்போவதில்லை.

ஆனால் தமிழ் தரப்பினர் இப்படித்தான் கூறுகின்றார்கள், ரணிலைப் பிரதமராக்குங்கள் வெளியில் இருந்து அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்றுதான் கூறுகின்றார்களே தவிர நேரடியாக ரணிலின் ஆட்சியில் பங்காளியாக மாற அவர்கள் கையொப்பம் இடமாட்டார்கள் என்பதே உண்மை.

இதனால்தான் ஜனாதிபதி கேட்கிறார் ரணில் பிரதமராக வர விரும்புபவர்கள் அவருக்கு ஆதரவாக கையொப்பம் இட்டுத்தாருங்கள் என்று. அது முடியாத காரியம் என்பதே உண்மை.

இதனால் ரணில் பிரதமராவது பகல் கனவு என்பதே உண்மை.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
UNP யும் TNA யும் இணைந்து ரணிலைப் பிரதமராக்குங்கள் என்று 113பேர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினால் உடனே ஜனாதிபதி ரணிலை பிரதமராக நியமித்தே ஆகவேண்டும்..! UNP யும் TNA யும் இணைந்து  ரணிலைப் பிரதமராக்குங்கள் என்று 113பேர்  கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினால் உடனே ஜனாதிபதி ரணிலை பிரதமராக நியமித்தே ஆகவேண்டும்..! Reviewed by Madawala News on November 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.