முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறப்பு நிகழ்வு.


(எச்.எம்.எம்.பர்ஸான்)  
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி
பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய முஸ்லிம் பாரம்பரிய கலைகலாசார நிகழ்வு  மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் கோலாட்டம் களிகம்பு, சீனடி, வாள்வீச்சு, கம்புவீச்சு, கஸீதா, நாட்டார் கவி, றபான், ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்குடா, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கலைமன்றங்களின் உறுப்பினர்கள், பாடசாலைகள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டு வயது வித்தியாசமின்றி தங்களுடைய ஆற்றல்களை வெளிப்படுத்தினார்கள்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் வீ. குணபாலன் மற்றும் வாழைச்சேனை மத்தி பிரேதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரேதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.எம்.நியாஸ், காத்தான்குடி பிரேதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஜாவாஹிர், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரேதேச சபையின் உறுப்பினர் பாயிஷா நெளபர் உட்பட்ட இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள்  எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறப்பு நிகழ்வு. முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறப்பு நிகழ்வு. Reviewed by Madawala News on November 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.