அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு.


இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை
மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. 

அதன்படி இன்று (02) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.82 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.32 ரூபாவாக நேற்றைய தினம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய காலமாக தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் இன்று அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு. அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு. Reviewed by Madawala News on November 02, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.