எல்லாப் புகழும் மைத்திரிக்கே : மங்களஜனநாயகத்திற்கு விரோதமாக, முகம் விருப்பமில்லை என்பதற்காக பதவியை பறித்து வேறோருவருக்கு கொடுத்து விட்டு பலாத்காராமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தேர்தலை நடாத்த வேண்டும் என்று கூற முடியாது” என பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று  இடம்பெற்று ஊடகவியலாளரின் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மங்கள சமரவீர மெற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மங்கள,

“ஜனாதிபதிக்கு விருப்பமான முகத்திற்கு பிரதமர் பதவியை கொடுக்கலாம் என ஜனநாயகத்தில் எங்கும் குறிப்பிடவில்லை மாறாக பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்றவர்களுக்கே பிரதமர் பதவியை கொடுக்க வேண்டும் என்றே அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியிலிருப்பவர்கள் கரட் கிழங்கொன்றை காட்டியவுடன் சிறிசேனவைப் போல மற்றப்பக்கத்திற்கு கட்சி தாவுபவர்கள் அல்ல. சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சிக்கோ ரணில் விக்கிரமசிங்கவிற்கோ ஒரு போதும் துரோகி ஆகமாட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்காக நாங்கள் நாட்டின் பல பாகங்களுக்கு சென்று மக்களிடம் வரமொன்றை கேட்டோம்.

அதாவது மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குமாறும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குமாறும் அதன்படி மக்கள் மைத்திரிக்கு 6 வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கும் வரத்தையும் ரணில் விக்கிரமசங்கவிற்கு 5 வருடங்களுக்கு பிரதமராக இருக்கும் வரத்தையும் மக்கள் தந்தார்கள். மக்கள் வரத்தின் படி நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே 

இருப்பினும் தேர்தலுக்கு செல்வதற்கு நாங்கள் பயமில்லை, உண்மையைச் சொல்வதென்றால் மைத்திரிபாலவிற்கு புண்ணியம் கிடைக்கட்டும் நாங்கள் முன்பிருந்ததை விட பிரபலமாகி விட்டோம். ஆதனால் தேர்தல் ஒன்றுக்கு எந்த நேரத்திலும் நாங்கள் தயாராகவுள்ளோம்.

ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல நாங்கள் தற்போது கூட தயாராக உள்ளோம். ஆனாலும் அது நீதியாக இடம் பெறவேண்டும் என்பதை மட்டுமே நாங்கள் வலியுறுத்துகிறோம்.

எல்லாப் புகழும் மைத்திரிக்கே : மங்கள எல்லாப் புகழும் மைத்திரிக்கே : மங்கள Reviewed by Madawala News on November 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.