ஜனாதிபதி என்னிடமும் பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டது உண்மைதான்- சஜித்பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு தனக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
சொன்னார் எனவும், நெருக்கடியொன்றைக் காரணம் காட்டி சுயநலமாக நடந்து கொள்வது எனது நோக்கமல்லவெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசியல் பலமுள்ள தலைவர்கள் மோதவேண்டியது, தன்னுடைய தலைவர்களுடன் அல்லவெனவும், மக்களின் வறுமையை இல்லாமல் செய்வதற்கே ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தாரா? அதற்கு தங்களது தலைவருடன் மோத முடியாது என நீங்கள் பதிலளித்தீர்களா? என நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  
ஜனாதிபதி என்னிடமும் பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டது உண்மைதான்- சஜித் ஜனாதிபதி என்னிடமும் பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டது உண்மைதான்- சஜித் Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.