தோப்பூர் மதனிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி பணிப்பாளர் தேசகீர்த்தி" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான சமாதான நீதவான்களின் பேரவை வருடாந்தம் இத்துறையில்
சிறப்பாக  பணியாற்றிய சமூக சேவையாளர்களுக்கு தேசகீர்த்தி விருது வழங்கி வருகிறது.

இவ்வாண்டு மிகச் சிறந்த சமூக செயற்பாட்டாளராக  செயற்பட்டார் என்ற காரணத்திற்காகவும், நீதி மற்றும் மனித உரிமைகளை நிலை நாட்ட பாடுபட்டார் என்ற அடிப்படையிலும் இம் முறை தோப்பூர் மதனிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி அதிபர் ஸைனுல் ஆப்தீன் அமீன்  "தேசகீர்த்தி" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வு இன்று 03.11.2018 ஆம் திகதி கொழும்பு 07 ஹெக்டர் கொபெகடுவ நிலையத்தில்  நடைபெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மனோ கணேஷன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அவர்களின் கரங்களால் இவ் விருதை வழங்கி வைத்தார்.
இவ் விழாவிற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் , ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஆகியோரும் பல்வேறுபட்ட சர்வதேச அமைப்புக்களின் தூதுவர்களும் கலந்து கொண்டனர்.
தோப்பூர் மதனிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி பணிப்பாளர் தேசகீர்த்தி" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தோப்பூர் மதனிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி பணிப்பாளர் தேசகீர்த்தி" விருது வழங்கி  கௌரவிக்கப்பட்டார். Reviewed by Madawala News on November 04, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.