அரசியல் நகர்வு !


( எம்.எம்.ஏ.ஸமட்  )
பல இன, மத, மொழி, கலாசார பண்பாடுகள் உடைய மக்களைக் கொண்ட நாடு என்ற பெருமையை
இலங்கை கொண்டிருந்தாலும்,
இந்நாடு சுதந்திரமடைந்த காலம் தொட்டு அரசியல் நெருக்கடிகளையும், முரண்பாடுகளையும், வேற்றுமைகளையும் சுமந்த நாடாக தொடர்ந்தும் காட்சியளித்து வருவதை அவதானிக்க முடிகிறது.


இம்முரண்பாடுகளும், வேற்றுமைகளும் இனங்களுக்கிடையில் மாத்திரமின்றி அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், சமூக, சமய இயக்கங்கள், பிரதேசங்களுக்கிடையிலும் பரவியிருப்பதையும் காண முடிகிறது. சுதந்திரத்தின் பின்னர் இலங்கையை மாறி மாறி ஆண்ட அரசாங்கங்கள் அல்லது அரசாங்கங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இன முரண்பாடுகள் அதனால் உருவெடுத்த பிரச்சினைகள் 70 வருடங்கள் தாண்டியும் தீர்வு எட்டப்படாது தொடர்வதானது இந்நாட்டை பல்வேறு வழிகளிலும் பின்னிடையச் செய்திருக்கிறது. இப்பின்னடைவின் அண்மைய உதாரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைக் கொள்ளலாம்.


இவ்வாறானதொரு சூழ்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் ஏனைய சிறுபான்மையின மற்றும் சிறிய கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக  கலைக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டது முதல் இக்கட்டுரை எழுதும் நேரம் வரை இந்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியானது சர்வதேச ஊடகங்களிலும் உள்நாட்டு ஊடகங்களிலும்  தலைமைப்புச் செய்தியாகவும் மக்களிடையே பேசுபொருளாகவும் மாறியிருப்பதுடன் அரசியல் கொந்தளிப்பு நிலையையம் உருவாக்கியிருக்கிறது.


இந்நெருக்கடித் தொடரில் கடந்த 26ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்ட பாருhளுமன்றம் நவம்பர் 14ஆம் திகதி பாரளுமன்ற கூட்ட அமர்வுக்காக திறக்கப்படும் என்றிருந்த நிலையில், ஜனாதிபதியின் விஷேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையானது சட்ட விரோதமானது என ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி , மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் தெரிவித்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், சார்ந்த கட்சிகளும் அவற்றை நியாயப்படுத்தியிருந்தன. இநிலையானது அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியது. இப்பாராளுமன்றக்;கான தீர்வை நோக்கிய நகர்வுகள் அரசியல் கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்டது.


இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதானது அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும்  இந்நடவடிக்கையை எதிர்த்து கடந்த 12ஆம் திகதி திங்கள் உயர் நீதி மன்றில் செய்த மனுத்தாக்களுக்கான தீர்ப்பு கடந்த செவ்வாக்கிழமை வழங்கப்பட்;டது.


இத்தீர்ப்பபை அடுத்து முன்னர் அறிவிக்கப்பட்;டதற்கு ஏற்ப புதன் 14ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் சமுகமளிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளதற்கமைய நேற்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அதன்போது ஆளம்தரப்பில் பெரும்பான்மை இல்லாமை குறித்து நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சபையில் அமளிதுமளி ஏற்பட்டதால் சபை மறுநாள்(இன்று) 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் நிதானமாகச் செயற்பட வேண்டியுள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

ஓற்றுமையும் நிதானமும்

இந்நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் சமத்துவத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே அனைத்து இனத்தையும் சார்ந்த சமாதான விருப்பிகளின் நிலைப்பாடாகும். அதற்;கு வழிவிட வேண்டியது. இந்நாட்டை ஆளும் அரசாங்கமாகும். ஓரினத்தின் உரிமைகளை கேள்விக் குறியாக்கி மற்றுமொரு இனம்; மாத்திரம் உரிமைகளையும,; சலுகைகளையும் அனுபவிக்க வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கங்கள் வழிவிடுவதும் என்ற சிந்தனைப்போக்குகளும், செயற்பாடுகளும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியமையை பல அனுபவங்கள் இன்னும் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறது.



இந்நிலையில் , ஓர் இனத்தின் உரிமைகளும், சுதந்திரங்களும், தனித்துவ  மத சட்டதிட்டங்களும், கலாசார, பண்பாட்டு, விழுமியங்களும் அவ்வப்போது  கேள்விக்குட்படுத்தப்படடுகின்றபோது, சந்தர்ப்பங்களில் அவற்றைப் பாதுகாக்க அவ்வினத்தின் அரசியல், ஆண்மீக, மற்றும் சிவில் சமூகங்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டியது அவசியம்..  இவற்றில் அதிகளவு பங்களிப்புச் செய்ய வேண்டியவர்கள் அவ்வினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளாகும்.  தற்கால அரசியல் சூழல் அதற்கான காலத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே மக்கள் கருதுகின்றனர். இக்கருத்துக்களின் அடிப்படையில்தான் முஸ்லிம் கட்சித் தலைமைகள் ஒன்றுபட வேண்டுமென்ற குரல்கள் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது



கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய அரசியல் யுகம் இந்நாட்டில் மலர்ந்தமை குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் சந்தோஷப் பெருமூச்சியை விடச் செய்தது. பல்வேறு எதிர்பார்ப்புக்களை எதிர்பார்க்கச் செய்தது. சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்;வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. அந்நம்பிக்கையை தொடரும் அரசில் நெருக்கடிகள் கேள்விக்குட்படுத்தியிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


பகலில் ஒன்று நடந்தால் இரவில் என்ன நடக்கும் என்றதொரு அரசியல் சூழலில் முஸ்லிம்களின் அரசியல் நகர்வுகளும் சமூகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தாத வண்ணம் அமையப்பெற வேண்டியுள்ளது. தொடரும் அரசியல் நெருக்கடிகள்; சிறுபான்மை இனங்களைச் சிந்திக்கச் செய்யவும் அதற்காக ஒன்றுபட்டுச் செயற்படவும் வழியை உருவாக்கியுள்ள சூழலில,; சிறுபான்மை சமூகமான   முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துப்படுத்துகின்ற அசியல் கட்சித் தலைமைகளும், பிரதிநிதிகளும், ஆண்மீக அமைப்புக்களின் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புக்களும் தங்களுக்குள் காணப்படுகின்ற  முரண்பாட்டு மனப்பாங்குகளுக்கு மத்தியில், எதிர்கால முஸ்லிம் சமூகம் தனித்துவ மத அடையாளங்களுடன் வாழ்வதற்காக, இச்சமூகத்துக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், இருக்கின்ற உரிமைகளையும் தனித்துவ  கலைகலாசார பண்பாடு விழுமியங்களுக்களையும் பாதுகாப்பதற்கும் நிதானமாகச் செயற்படவும் அதற்காக  வேண்டுமைகளுக்குள் ஒன்றுமைப்படுவது அவசியமெனவும் மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருவதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.


ஏனெனில், கடந்த 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நருக்கடியில் பெரும்பான்மைப் பலம் எந்தத்தரப்புக்குள்ளது என்பதைப் புடம்போடுவதற்கு சிறுபான்மையினக் கட்சிகளின் ஆதரவு தேவை என்ற சூழல் ஏற்பட்டிருந்த நிலையில,; பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரு முஸ்லிம் கட்சித் தலைமைகளும் ஒரே முடிவில் இருந்தமையும். அதைத் தொடர்ந்து புனித மக்காவிற்குச் சென்று உம்ரா கடமையில் ஈடுபட்ட பின்னர் ஒன்றிணைந்து ஒற்றுமையைப் பறைசாட்டி நிழல்படங்களும் எடுத்து வெளியிட்டமையும் இரு கட்சி ஆதரவாhளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்ததையும் சுட்டிக்காட்ட வேண்டும்.


ஆனால், இந்த ஒற்றுமை அரசியல் நலன்களுக்காக மாத்திரமின்றி அரசிலோடு இணைந்த அத்தனை சமூக நலன்களுக்காகவும் தொடர்ச்சியாக நிலவ வேண்டுமென்பதே முஸ்லிம்களின் பிரார்தனையாகவுள்ளதோடு முஸ்லிம் கட்சிகள் எடுக்கின்ற எந்த அரசியல் முடிவுகளும் முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும், சமூக ஆரோக்கியத்தையும் கேள்விக்குட்படுத்திவிடக் கூடாது என்பதும் மக்களின் குரலாகவுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

நெருக்கடியான அரசியல் நகர்வுகளின் வெளிப்படைத்தன்மை. மற்றும் இரகசியத் திட்டங்களையும், பொறிமுறைகளையும் விளங்கிக்ககொள்ளாது சுயநலன்களுக்காக முரண்பட்டுக் கொண்டு தத்தமது நிலைகளையும், தளங்களையும் தக்கவைத்துக் கொள்வதற்காகச் செயற்படுவதானது எதிர்கால சந்ததிகளைப் பாதிக்கச் செய்யும். ஏனெனில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் முஸ்லிம்களைப் பாதித்திருக்கிறது. அதற்கோர் உதாரணமாக உள்ளுலாட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவுவளித்ததைக் குறிப்பிட முடியும்.

இந்நிலையில், முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கும் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகளுக்கும் இராஜதந்திர ரீதியாகவும் அகிம்சை வழியிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்து தீர்வைப் பெற்றுக்கொள்ள இந்நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒற்றுமைப்பட்டு செயற்படுவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. அத்தோடு, தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்கள் சார்பான பொதுப் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள சகோதர தமிழ் மக்களோடும் தலைமைளோடும் ஒன்;றுபட்டு செயற்படுவதும் காலத்தின் தேவையாகும்.

இந்நிலையில் ஏறக்குறைய 2 கோடி 30 இலட்சம் மக்கள் தொகையில் 9.7 வீதமாக வாழும் முஸ்லிம்கள் நிதானமாகச் செயற்பட வேண்டிய கால சூழ்நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதை உணர முடிவதுடன்; இந்நாட்டு முஸ்லிம்கள் இந்நாட்டின் சுதந்திரதிற்காகவும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் தங்களை அர்ப்பணம் செய்திருக்கிறார்கள் என்பதை இந்நாட்டின் வரலாற்றில் முஸ்லிம்களின் வகிபாகம் எத்தகையதாக இருந்துள்ளது என்பதை வராலாற்றைப் புரட்டிப்பார்த்தால் புரிய முடிகிறது.

தேசப்பற்றும் வரலாறும்


தேசப்பற்றுள்ள முஸ்லிம்களின் வரலாறானது, வரலாறு தெரியாத கடும்போக்காளர்கள் கூறுவதுபோன்றதல்ல. இந்நாட்டில் மிக்க தொண்மை வாய்ந்த வரலாற்றை கொண்ட ஒரு தனித்துவ இனமாக முஸ்லிம்கள் வாழ்;ந்து கொண்டிருக்கிறார்கள்.


அரேபியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னமே முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். 1300 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை இலங்கை வாழ் முஸ்லிம்கள் கொண்டிருக்கிறார்கள். அவற்றுக்கோர் உதாரணமாக காலியில் உள்ள 'கச்சு வத்த' என்ற இடமாகும். அவ்விடத்தின்; உண்மையான பெயர் ஹஜ்ஜுவத்தையாகும். புனித மக்காவுக்கு இற்றைக்கு 1300 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் இந்த இடத்திலிருந்துதான் சென்றிருக்கிறார்கள். இதனை மையப்படுத்தியே அவ்விடத்துக்கு ஹஜ்ஜுவத்தை எனப் பெயர் வந்ததாக வரலாற்று ஆசிரியர்களின் பதிவுகள் மூலம் அறிய முடிகிறது.


ஐரோப்பிய போத்துக்கீசர்களும், ஒல்லாந்தர்களும், ஆங்கிலேயர்களும் இந்நாட்டை ஆட்சி செய்வதற்கு முன்னரும் ஆட்சி செய்த காலத்திலும் இந்நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்களின் பங்களிப்புக்கள் அக்கால ஆட்சியாளர்களுக்கு அளப்பெரியதாகவே இருந்துள்ளது. இராஜதந்திர துறையிலும், பாதுகாப்புத்துறையிலும், மருத்துவத்துறையிலும், வணிகத்துறையிலுமென பல்வேறு துறைகளில் அக்காலத்து ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம்கள் பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்காக பல தியாகங்களைப் புரிந்திருக்கிறார்கள்
முஸ்லிம்கள் கடற் பயணத்திலும், பல மொழிகள் பேசுவதிலும், உள்நாட்டு, வெளிநாட்டு தொடர்பாடல்களிலும் என பல்வேறு விடயங்களில் தேர்ச்சியும் அனுபவமும் பெற்றிருந்ததனால் அத்தகையவர்கள் அக்காலத்து மன்னர்களின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.


கி.பி. 1258இல் யாப்பகுவை ஆண்ட முதலாம் புவனேகுவபாகு என்ற மன்னன் அக்காலத்தில் இருந்த எகிப்தின் மம்லூக்கிய மன்னனுடனான வர்த்தக தொடர்பின் நிமித்தம் அபு உஸ்மான என்பவரை தூதுவராக அனுப்பி வைத்ததாகவும் கி.பி. 1762ஆம் ஆண்டளவில் கண்டி இராஜதானியாக இருந்த கீர்த்தி சிறி இராஜசிங்கனைச் சந்திப்பதற்காக கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் தூதுவராக ஜோன் பைபஸ் என்பவர் திருகோணமலைக்கு வந்திருந்தவேளை, அவரை வரவேற்று கண்டிக்கு அழைத்து வருவதற்காக மவுலா முகாந்திரம் என்பவரது புதல்வாரன உதுமான் லெப்பை என்பவரை மன்னர் அனுப்பி வைத்திருந்ததாகவும்  அதேபோல், போர்த்துக் கீசயருக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை விரட்டியடித்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக கள்ளிக் கோட்டை சமோரினின் உதவியைப் பெற மாயாதுன்னை மன்னன் முஸ்லிம்களையே தூதுவராக அனுப்பி வைத்திருந்ததாகவும் வரலாறு  கூறுகிறது.


அத்தோடு, தூதுவர்களாக மாத்திமின்றி மன்னர்களின் பாதுகாப்பு, வைத்தியம், வாணிபம் என பல்வேறு விடயங்களில் அக்காலத்து பௌத்த சிங்கள மன்னர்களின் விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் ஆளுமைமிக்கவர்களாவும் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய சிங்கள, தமிழ் தலைவர்களுடன் இணைந்து முஸ்லிம் தலைவர்களும்; போராடியிருக்கிறார்கள். இவ்வாறு இந்நாட்டையும,; ஜனநாயகத்தையும் பாதுகாத்த முஸ்லிம்களின் வரலாறு புடம்போட்டுக்கொண்டிருக்கையில் கடந்த காலங்களில் விட்ட தவறுகளைதத் தொடர்ந்தும் மேற்கொள்ளாது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கும் சுய இலாபங்களுக்கும் அப்பால் முஸ்லிம் அரசியல் கட்சிகளும், ஆண்மீகத் தலைமைகளும், சிவில் அமைப்புக்களும்  சமகால, எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கி சமகால  அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப வேற்றுமைக்குள் ஒன்றுமைப்பட்டு செயற்பட வேண்டியது அவர்களின் தார்மீகப் பொறுப்பாகவுள்ளதுடன் செயற்பாடுகளையும் நிதானத்துடன் மேற்கொள்ள வேண்டிய தேவையுமுள்ளது.

அரசியல் பலமும் பிரதிநிதித்துவமும்


அல்லாஹ் வழங்கிய இஸ்லாம் மார்க்கமானது முஸ்லிம்களின் சகோதரத்துவம் என்ற ஒற்றுமையில் உருவான ஒப்பற்ற வாழ்க்கை நெறி. இருந்தும், இதன் ஒழுக்கப் பண்புகளையும் மாண்புகளையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி சுய இலாபங்களுக்காகத் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காகவும், கட்சி ரீதியாகவும், ஆன்மீகக் கொள்கைகைள் ரீதியாகவும், அமைப்புக்கள் ரீதியாகவும் தனித்தனியே பிரிந்து செயற்பட்டு ஒருவரை ஒருவர், அமைப்புக்களை அமைப்புக்கள், கட்சிகளை கட்சிகள் காட்டிக்கொடுக்கும் நிலை காணப்படுகிறது.


சமூக ஒற்றுமை என்பது ஒரு கடமை, ஒரு வணக்கம், சமூகத்தில் வாழுக்pன்ற ஒவ்வொருவரும் தனி நபர்களுக்கிடையே பரஸ்பர அறிமுகம், புரிந்தணர்வு, ஒப்பந்தம், ஐக்கியம் இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும்


இந்த எதிர்பார்ப்;வை நிறைவேற்ற வேண்டிய முஸ்லிம்கள் பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது. பூரமாண வாழ்க்கைத் திட்டத்தை வழங்கியுள்ள இஸ்லாத்தை கௌரப்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரிச் சமூகமாக வாழ வேண்டிய முஸ்லிம் சமூகம், ஒற்றுமையென்ற கயிற்றைப் பலமாகப் பற்றிக்கொள்ளுங்கள் உங்களுக்குள் பிரிந்து விடாதீர்;கள் என நம்மை குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் வலியுறுத்தி வழிகாட்டியுள்ள நிலையில், இச்சமூகம் ஆண்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இன்னும் என்னென்ன விடயங்களிலெல்லாம் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து செயற்படுவது அர்த்தமற்றது.


ஒற்றுமைக்கு வழிகாட்ட வேண்டிய சமூகம் நான் பிடித்த முயலுக்கு முன்று கால் என்ற நிலையில் இருந்து விடபட வேண்டும். இந்நாட்டில் ஏற்படப்போகும் ஆட்சி அதிகாரப் மாற்றப் பரப்புக்குள் வாழும் முஸ்லிம் சமூகம்  எத்தகைய ; சவால்களுக்கு முகம்கொடுக்கும் என்று சிந்தித்து அச்சவால்களை வெற்றி கொள்ளவும், ஏழுந்துள்ள மறறும் எழும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்ப்வைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இராஜதந்திர ரீதியில் நிதானத்துடன் அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் வேற்றுமைக்குள் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டியது தற்கால அரசியல் சூழலின் அதிமுக்கிய தேவைளாகவுள்ளது. இந்தேவையானது முஸ்லிம்களின் அரசியலுக்குப் பலத்தை அளிப்பதுடன் எதிர்காலத் தேர்தல்களில் முஸ்லிம் பிரநிதித்துவங்களை அதிகரிக்கவும் வழிவுக்கும் என்பது நிதர்சனமாகும்.

விடிவெள்ளி  ( எம்.எம்.ஏ.ஸமட்  )

அரசியல் நகர்வு ! அரசியல் நகர்வு ! Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.