60 இலங்கை ஊடகவியலாளா்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் கேமராக்களை வழங்கி உதவி செய்த துருக்கி.


(அஷ்ரப் ஏ சமத்)
இலங்கையிலுள்ள் முஸ்லிம் ஊடகவியளாளா்களின்  துறைசாா் மேம்பாட்டை கருத்திற் கொண்டு 
அன்மையில் இலங்கை வந்திருந்த துருக்கிய முன்னாள் பிரதமரை சந்தித்த முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என். எம். அமீன்  முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பிணா்களுக்கு உதவும் படி வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தாா்.

அதற்கமைவாக  கொழும்பில் உள்ள  இலங்கைகான துருக்கி துாதரகமும்  துருக்கி ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவா் நிலையமும் (ரிக்கா) 60 ஊடகவியலாளா்களுக்கும் 5 ஊடக நிறுவனங்களுக்கும்  ஊடகவியலாளா் 10 பேருக்கு 13 மடிககணினியும் , 47 பிரதேச ஊடகவியலாளா்களுக்கும் ஒர் இலட்சம் ருபா பெறுமதியாக போட்டோ கமராக்களையும் நேற்று  கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது.


இந் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கொழும்பில் உள்ள துருக்கி நாட்டின் துாதுவா் துண்ஜா ஓஸ்துஹாதா் பிரதம  அதிதியாகக் கலந்து கொண்டாா்.  அமைச்சா் ்பைசா் முஸ்தாபா, முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா், நுஆ கட்சியின் தவைவா் ஆசாத் சாலி, புரவலா் ஹாசீம் உமா், பலஸ்தீன், ஈரான், பாக்கிஸ்தான் ஆப்கனிஸ்தான் துாதுவா்களும் கலந்து கொண்டனா். அத்துடன் ஊடகம் பற்றி அஷ் ஷேக் அர்கம் நுாராமிட   பிரதான உரை நிகழ்த்தினாா். செயலாளா் சாதிக் சிஹானும் இங்கு உரையாற்றினாா்கள்.


இலங்கையின் சகல மாவட்டங்களிலும் இருந்து துாதுரகம் சுயாதீனமாக தெரிபு செய்யப்பட்ட 60 ஊடகவியாளா்களுக்கு சுமாா் 60 இலட்சம் பெறுமதி வாய்ந்த ஊடக உபகரணங்கள் பகிந்தளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய துருக்கிய  துாதுவா் -

கடந்த  சுனாமியின்போது இலங்கை பாதிக்கப்பட்டதில் இருந்து  துருக்கி அரசாங்கம் வீடமைப்பு, மற்றும் மனிதபினமான உதவிகள், இயற்கை அனா்த்த்தின்போது உதவி வருகின்றது. அத்துடன் அண்மையில் 5 ஊடகவியலாளா்களை துருக்கி நாட்டுக்கு அனுப்பி  இலக்ரோணிக் மீடியா துறையில் பயிற்சி அளித்துள்ளது.  பேராதெனியா பல்கலைக்கழகம் மேலும் 3 கல்வி நிறுவனங்களுக்கு ஸ்கேனா் மெசின்களை துருக்கி அன்பளிப்பு செய்துள்ளது. 

அத்துடன்  இலங்கையின் வா்த்கம் நிர்மாணம் தேயிலை ஏற்றுமதி போன்ற பல்வேறு அபிவிருத்தியில துருக்கி இலங்கை நட்புறவு வா்த்தகம் பலம் பெற்றுள்ளதாகவும் துருக்கிய துாதுவா் அங்கு தெரவித்தாா்.


60 இலங்கை ஊடகவியலாளா்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் கேமராக்களை வழங்கி உதவி செய்த துருக்கி. 60 இலங்கை  ஊடகவியலாளா்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் கேமராக்களை வழங்கி உதவி செய்த துருக்கி. Reviewed by Madawala News on November 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.