அரசாங்கத்தில் இணைய முடியாது.. 6 பேரும் ஜனாதிபதியை சந்தித்து நேரடியாக கூறி விட்டோம்.


மைத்திரி - மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு முன்னாள் அமைச்சர்
மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில்  திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

தற்போதைய சூழ்நிலையில் கட்சித்தாவல்கள் அதிகமாக இடம்பெறும் சந்தர்ப்பத்தில் மனோ - மைத்திரி சந்திப்பு சற்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தமிழ் மக்கள் கூட்டணியின் 6 உறுப்பினர்கள் இன்று அவரை சந்திக்க சென்றிருந்தோம். இதில் புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் அழைப்பை நிராகரிப்பதாக ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இணைய முடியாது.. 6 பேரும் ஜனாதிபதியை சந்தித்து நேரடியாக கூறி விட்டோம். அரசாங்கத்தில் இணைய முடியாது.. 6 பேரும் ஜனாதிபதியை சந்தித்து நேரடியாக கூறி விட்டோம். Reviewed by Madawala News on November 07, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.