நண்பர்களின் 18 வருட ஒன்று கூடலால் விளைந்தது நன்மை.. #கிண்ணியா


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 2K 2000 ஆண்டின் GCE O/L மாணவர்களின்
"தொடரும் நினைவுகள்" எனும் கருப் பொருளின் கீழ் ஒன்றுகூடல் நேற்று 04/11/2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை   சின்னம்பிள்ளைச்சேனையில் உள்ள மைதானம் ஒன்றில் இடம் பெற்றது.

சுமார்   18  வருடங்களுக்கு பிறகு  ஒன்று கூடிய மகிழ்சியான தருனத்தில் ஏற்பாட்டுக் குழுவிற்கும் வருகை தந்த நண்பர்களுக்கும், கடல் கடந்த அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழு நன்றிகளை தெரிவிக்கிறது.

இதில் 120 க்கும் மேற்பட்ட 2000 ம் ஆண்டில் கா.பொ.தா.சாதாரண தரம் பயின்றவர்கள் கலந்து கொண்டார்கள்.
பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் விசேடமாக பணமாக சேர்க்கப்பட்ட ஒரு தொகை பணம் கடும் நோயினால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர் காலத்திலும் கடல் கடந்த குழுமங்களில் உள்ளோர்கள், இக் குழுவின் சக உறுப்பினர்கள் இணைந்து பல செயற் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

நண்பர்களின் 18 வருட ஒன்று கூடலால் விளைந்தது நன்மை.. #கிண்ணியா நண்பர்களின்  18 வருட ஒன்று கூடலால் விளைந்தது நன்மை.. #கிண்ணியா Reviewed by Madawala News on November 05, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.