12 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் புரோக்கா்களிடம் இருந்து அல்லாஹ் காப்பற்றினான்.


(அஷ்ரப் ஏ சமத்)
அடுத்த சந்ததிகளுக்காவது இந்த நாட்டினை நாம் நல்வழியில் இட்டுச் செல்ல வழி சமைக்க வேண்டும்.

சிலரது அராஜகம்  இந்த நாட்டில் தலைதுாக்கியுள்ளது.
இந்த நாட்டின் சாக்கடை அரசியலுக்குள் நாங்களும் மட்டைகளாக  உள்பட்டுள்ளோம்.

 கடந்த வாரம் பாராளுமன்ற தலைகளுக்கு பேரம் பேசுதல். இழுத்தெடுத்தல் போன்ற சதிவலைகள் சில அரசியல் புரோக்கா்களின் பிடியிலிருந்து   12 பா.உறுப்பிணா்களும்  தப்பித்துக் கொண்டோம். இல்லாவிட்டால்  சட்ட விரோதமான அரசியலில் நாமும்  உட்சென்றிருந்தால் முஸ்லீம் சமுகத்தின் மீதே வீன் பழிகள் ஏற்பட்டிருக்கும்.  அவற்றில் இருந்து  அல்லாஹ் எங்களைக் காப்பாற்றினான்.இந்த தாா்பாா் அராஜாக  அரசியலுக்கு எதிராக நாம் திடகாந்திரம் கொண்டுள்ளோம் .

எமது எதிா்கால பரம்பரையினருக்காக ஓர் சீரிய அரசியல் பயணம் வேண்டும் என ஸ்ரீ.ல.மு காங்கிஸ் தலைவா்  (11) மக்காவில் இருந்து வந்து மருதானையில் உள்ள அல் ஹிதாயா பாடசாலையில் நுாறுல் அயின் நஜ்முல் ஹூசைனின் நுால் வெளியிட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அவா் தெரவித்தாா்.


கலாபுஷனம்  நுாறுல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய  ”மின்னும் தாரகைகள் நுால் வெளியீட்டு வைபவம்(11) கொழும்பு 10 அல் ஹிதாயா கல்லுாாியின் பஹாா்டீன் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.


இந் நிகழ்வு  கலாபுஷனம் இலக்கிய தாரகை நயிமா சித்தீக் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கிம் கலந்து கொண்டாா். நுாலின் முதற்பிரதியை முஸ்லிம் சலாஹூதீன் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.


இந் நுாலில் இலங்கை கடந்த 5 தசாப்பதங்களாக எழுதிவரும் 140 முஸ்லிம் பெண் எழுததாளா்களது புகைப்படத்துடன் குறிப்புக்களும் இடம் பெற்றுள்ளன.
நுால் பற்றி பேராசிரயா் மௌலவி, எம்.எஸ்.எம் ஜலால்தீன் பேராசிரியா்  எம்.எஸ்.எம்  அனஸ். மற்றும் கப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன், சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ் உடபட ஏராளானமான இலக்கியவாதிகள், எழுத்தாளா்கள், பெண் எழுத்தாளா்கள் ஊடகவியலாளா்கன் மண்டபம் நிறைந்திருந்தனா்.
12 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் புரோக்கா்களிடம் இருந்து அல்லாஹ் காப்பற்றினான். 12 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் புரோக்கா்களிடம் இருந்து அல்லாஹ் காப்பற்றினான். Reviewed by Madawala News on November 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.