(நேரடி வீடியோ) கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம். அலரிமாளிகைப் பகுதியிலும் பரபரப்பு.


“ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்”  எனும் தொனிப்பொருளில் ஐக்கிய
தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.  அலரிமாளிகைப் பகுதியிலும் மக்கள்  குழுமியுள்ளனர்.

அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்குள்ளும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் ஓரளவு பரபரப்பு காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கலகமடக்கும் பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நீர்த்தரைப் பிரயோம் மேற்கொள்ளும் வாகனங்களும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் 600 போக்குவரத்துப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதைவிட 10 விசேட அதிரடிப்படையின் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(நேரடி வீடியோ) கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம். அலரிமாளிகைப் பகுதியிலும் பரபரப்பு. (நேரடி வீடியோ) கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம். அலரிமாளிகைப் பகுதியிலும் பரபரப்பு. Reviewed by Madawala News on October 30, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.