மூன்று கோடி நம்பிக்கை மோசடியுடன் மாயமான பெண்... உங்கள் உதவியை நாடும் போலீசார்.


 இளம் பெண் ஒருவர் பாரிய பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலநறுவை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான ஷ்யாமலி திஸாநாயக்க என்ற பெண், மூன்று கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளார்.

குறித்த பெண் தற்போது தலைமறைவாகி உள்ள நிலையில், பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஷ்யாமலி திஸாநாயக்க என்ற பெண் கடந்த ஒன்றரை வருடமாக குறித்த பிரதேச மக்களுடன் மிகவும் நெருக்கதாக கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டுள்ளார். திடீர் பணத் தேவைகளின் போது அவர் பணம் வழங்கி உதவியுள்ளார்.

இவ்வாறு பலரது மனதை வென்ற இந்த பெண் ஒரு லட்சம் ரூபாய் பணத்திற்கு வாரத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வட்டி பணம் வழங்கியுள்ளார். இதனால் பலர் அவரிடம் வைப்பு செய்வதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர்.

சிலர் தங்கள் வீட்டில் உள்ள மாடுகளை விற்பனை செய்து அவரிடம் பணம் வைப்பு செய்துள்ளனர். அவரால் அதிக வட்டி பணம் வழங்கப்படுகின்றமையினால் பொது மக்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

அவ்வாறான நிலைமையில் பணத்தை பெற்றுக் கொண்ட பெண் கடந்த 17ஆம் திகதி முதல் குறித்த பிரதேசத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். அவர் தொடர்பில் தகவல் அறிந்தால் பொலநறுவை பொலிஸாரிடம் அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.

அவரது புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார் தகவல் அறிந்தால்
027 - 2222222 என்ற இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளனர்.

தகவல் மூலம் : http://nethgossip.lk/article/32324
மூன்று கோடி நம்பிக்கை மோசடியுடன் மாயமான பெண்... உங்கள் உதவியை நாடும் போலீசார்.  மூன்று கோடி நம்பிக்கை மோசடியுடன் மாயமான பெண்... உங்கள்  உதவியை நாடும் போலீசார். Reviewed by Madawala News on October 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.