யானையுடன் மோதியதில் இளவயது பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு.


கண்டி - யாழ்ப்பாணம் ஏ 9 பிரதான வீதியின் ஞானிக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று
யானையுடன் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்தில் இருந்து கெகிராவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையின் குறுக்காக பயணித்த யானை ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

திருப்பனே, உலகல்ல பகுதியை சேர்ந்த 32 வயதான மோதர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யானையுடன் மோதியதில் இளவயது பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு. யானையுடன் மோதியதில் இளவயது  பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு. Reviewed by Madawala News on October 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.