மழையுடன் கூடிய இன்றைய காலநிலை அறிக்கை.



நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது குறிப்பாக மத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 


ஏனைய பிரதேசங்களில் (குறிப்பாக வடமத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில்) சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி. எதிர்பார்க்கப்படுகின்றது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று அந்த வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் கூடிய இன்றைய காலநிலை அறிக்கை. மழையுடன் கூடிய இன்றைய காலநிலை அறிக்கை. Reviewed by Madawala News on October 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.