மூதூர் மத்திய கல்லூரி வாயில் அருகில் ஒல்லாந்தர் காலத்து நாணயத்தை கண்டெடுத்த மாணவன்.


-ஹஸ்பர் ஏ ஹலீம்-
மூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து  VOC நாணயம் ஒன்று நேற்று (19)
காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பாடசாலை மாணவன் ஒருவன்  பாடசாலை பிரதான வாயில் முன்னால் குறித்த நாணயத்தை கண்டெடுத்துள்ளான்.

திருகோணமலை, மூதூர் மத்திய கல்லூரி அமைந்துள்ள இடத்தில், இலங்கையில்  ஒல்லாந்தர்களின்  முதலாவது  கோட்டை அமைக்கப்பட்டிருந்தது என்பதை, இந்நாணயக் கண்டுபிடிப்பும் ஊர்ஜிதப்படுத்துவதாக வரலாற்று ஆய்வாளரும், கல்லூரியின் பிரதி அதிபருமான  ஜனாப்.எஸ்.எம்.பிஸ்ரி தெரிவித்தார்.

VOC என்பது ஒல்லாந்தர் கால "கிழக்கிந்திய கம்பனி"  எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும். இந் நாணயம் 1750 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது.

மூதூர், மத்திய கல்லூரி தேசிய பாடசாலை  500 வருடங்கள் பழமையான வரலாறு கூறும் இடத்தில், அமைந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் இக்கண்டுபிடிப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூதூர் மத்திய கல்லூரி வாயில் அருகில் ஒல்லாந்தர் காலத்து நாணயத்தை கண்டெடுத்த மாணவன். மூதூர் மத்திய கல்லூரி வாயில் அருகில் ஒல்லாந்தர் காலத்து நாணயத்தை கண்டெடுத்த மாணவன். Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.