விமான படைக்கு சொந்தமான டிபெண்டர் கடுமையான விபத்து.. ஒருவர் பலி.


கட்டுநாயக்கவில் அமைந்துள்ள  விமான படைக்கு சொந்தமான டிபெண்டர் வகை ஜீப் வண்டி
விபத்துக்குள்ளானதால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில்  இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த விமான படைக்கு சொந்தமான டிபெண்டர் வகை ஜீப் வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பல வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 18ஆம் மைல் கல் பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டிபெண்டர் வாகனத்தை ஓட்டிய விமானப்படை தளபதி எஸ்.எல்.பீ.நுவர பிரதிப் ரணசிங்க என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் அனுராதபுரம், தலாவ, குபுக்கஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

மற்றுமொறு சிப்பாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த ஜீப் வண்டி, அந்த வீதியில் பயணித்த சில  வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விமான படைக்கு சொந்தமான டிபெண்டர் கடுமையான விபத்து.. ஒருவர் பலி. விமான படைக்கு சொந்தமான டிபெண்டர் கடுமையான விபத்து.. ஒருவர் பலி. Reviewed by Madawala News on October 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.