ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் தடை உத்தரவு.


ஐக்கிய தேசியக் கட்சியினரால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில்
கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்ட சிலருக்கு இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல், அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல் ஆகியவற்றிற்கு எதிராகவும் அரச வளாகங்களுக்குள் நுழைவதற்கு எதிராகவும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்ட பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைய, கொழும்பு மேலதிக நீதவானால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரால் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகஸ்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் தடை உத்தரவு. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் தடை உத்தரவு. Reviewed by Madawala News on October 30, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.