நாட்டின் ய‌தார்த்த‌த்தை உண‌ர்ந்து ஜ‌னாதிப‌தி மைத்திரிபால‌, பிர‌த‌ம‌ராக‌ ம‌ஹிந்த‌வை நிய‌மித்திருப்ப‌து பெரிதும் பார‌ட்டுக்குரிய‌ விட‌ய‌ம்.


நாம் மிக‌வும் எதிர்பார்த்த‌ புதிய‌ பிர‌த‌ம‌ராக‌ தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அவ‌ர்க‌ளுக்கு
உலமா க‌ட்சி வாழ்த்து தெரிவிப்ப‌துட‌ன் ம‌ஹிந்த‌ மைத்திரி இணைந்த‌ புதிய‌ ஆட்சி மூல‌ம் நாடு வ‌ள‌ம்பெறும் என‌ எதிர் பார்ப்ப‌தாக‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.


இது ப‌ற்றி அவ‌ர் தெரிவித்துள்ள‌தாவ‌து, இந்த‌ நாட்டில் உள்ள‌ க‌ட்சிக‌ளில் ஸ்ரீல‌ங்கா சுத‌ந்திர‌ க‌ட்சியே சிறுபான்மை ந‌ல‌ன்க‌ளில் பெரிதும் அக்க‌றை கொண்ட‌ க‌ட்சி என்ப‌தை வ‌ர‌லாற்றில் க‌ண்டுள்ளோம். அது ம‌ட்டும‌ல்லாம‌ல் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ என்ற‌ த‌னி ம‌னித‌ர் இந்த‌ நாட்டில் ஒரு நிக‌ர‌ற்ற‌ அர‌சிய‌ல்வாதியாவார்.


இவ‌ற்றின் கார‌ண‌மாக‌வே உல‌மா க‌ட்சி 2005ம் ஆண்டு முத‌ல் ஸ்ரீல‌ங்கா சுத‌ந்திர‌ க‌ட்சி த‌லைமையிலான‌ ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ முன்ன‌ணியுட‌ன் இணைந்து செய‌ற்ப‌டுகிற‌து.


நாம் அக்க‌ட்சியுட‌ன் இணைந்து ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வ‌ளித்த‌ போது செய்து கொண்ட‌ ஒப்ப‌ந்த‌ங்க‌ளில் உள்ள‌வைதான் நாட்டில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை ஒழிப்ப‌து, மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌னம் வ‌ழ‌ங்குவ‌து, ப‌ள்ளிவாய‌ல் இமாம், முஅத்தின்க‌ளுக்கு அர‌ச‌ ச‌ம்ப‌ள‌ம் வ‌ழ‌ங்குவ‌து, இன‌ப்பிர‌ச்சினைக்கான‌ பேச்சுவார்த்தையில் அர‌சிய‌ல் அறிவுள்ள‌ உல‌மாக்க‌ளை இணைத்துக்கொள்ள‌ல் என்ப‌வையாகும்.


ப‌த‌வியோ, ப‌ண‌மோ பெறாம‌ல் ச‌மூக‌த்துக்கான‌ தேர்த‌ல் ஒப்ப‌ந்த‌ம் செய்த‌ முத‌லாவ‌து முஸ்லிம் க‌ட்சி உல‌மா க‌ட்சியாகும்.

அந்த‌ வ‌கையில் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச‌வின் த‌ற்றுணிவின் கார‌ண‌மாக‌ நாட்டில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் ஒழிக்க‌ப்ப‌ட்டு வ‌ட‌க்கு கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் சுத‌ந்திர‌ம் பெற்ற‌ன‌ர். மௌல‌வி ஆசிரிய‌ நிய‌ம‌ன‌மும் வ‌ழ‌ங்கி ம‌ஹிந்த‌ த‌ன‌து வாக்குறுதியை நிறைவேற்றினார். ஏனைய‌ எம‌து ஒப்ப‌ந்த‌ ச‌ர‌த்துக்க‌ள் எதிர் கால‌த்தில் நிறைவேறும் என்று ந‌ம்புகிறோம்.


க‌ட‌ந்த‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் பெரும்பாலான‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் ஐ தே க‌ ப‌க்க‌ம் நின்ற‌ போது உல‌மாக்க‌ள் த‌லைமையிலான‌ உல‌மா க‌ட்சி ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வை ஆத‌ரித்து மிக‌ப்பெரிய‌ ச‌ம‌ நிலைப்பாட்டை வெளிக்காட்டிய‌து.
ம‌ஹிந்த‌ தோற்ற‌ போது அவ‌ருட‌ன் நின்ற‌ முஸ்லிம்க‌ள் அவ‌ரை விட்டு விட்டு ஓடிய‌ போது ப‌ல‌த்த‌ எதிர்ப்புக்க‌ளையும் ச‌மூக‌ இம்சைக‌ளையும் தாங்கிக்கொண்டு உல‌மா க‌ட்சி ம‌ஹிந்த‌வுட‌ன் நின்ற‌து.


அத‌ன் பின் நாம் ஏற்க‌ன‌வே ஸ்ரீல‌ங்கா சுத‌ந்திர‌க்க‌ட்சியுட‌ன் கூட்டிணைந்த‌வ‌ர்க‌ள் என்ற‌ வ‌கையில் ஜ‌னாதிப‌தி மைத்திரியின் அழைப்பின் பேரில் மீண்டும் சுத‌ந்திர‌க்க‌ட்சியின் தோழ‌மைக்க‌ட்சியாக‌ இணைந்து செய‌ற்ப‌டுகிறோம். இந்த‌ நிலையிலும் ம‌ஹிந்த‌வும் மைத்திரியும் இணைந்து செய‌ற்ப‌டுவ‌த‌ன் மூல‌மே நாட்டில் ஸ்திர‌ம‌ன‌ ஆட்சியை கொண்டு வ‌ர‌ முடியும் என்ப‌தை ஜ‌னாதிப‌தி த‌லைமையிலான‌ க‌ட்சிக்கூட்ட‌ங்க‌ளின் போது வ‌லியுறுத்தி வ‌ந்தோம்.

எம‌து எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறியுள்ள‌து. நாட்டின் ய‌தார்த்த‌த்தை உண‌ர்ந்து ஜ‌னாதிப‌தி மைத்திரிபால‌, பிர‌த‌ம‌ராக‌ ம‌ஹிந்த‌வை நிய‌மித்திருப்ப‌து பெரிதும் பார‌ட்டுக்குரிய‌ விட‌ய‌ம் ம‌ட்டும‌ன்றி ஜ‌னாதிப‌தியின் தைரிய‌த்தையும் காட்டுகிற‌து.

இத்த‌கைய‌ சுத‌ந்திர‌க்க‌ட்சியின் ஜ‌னாதிப‌தி, பிர‌த‌ம‌ர் என்ற‌ இருவ‌ர் மூல‌ம் நாடு வ‌ள‌ம்பெற‌ நாம் வாழ்த்து தெரிவிப்ப‌துட‌ன் நாட்டில் ச‌க‌ல‌ இன‌ங்க‌ளும் ச‌ம‌ உரிமை பெற்று நிர‌ந்த‌ர‌ ச‌மாதான‌ம் ஏற்ப‌ட‌ உழைப்பார்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கை உல‌மா க‌ட்சிக்கு உள்ள‌து.
நாட்டின் ய‌தார்த்த‌த்தை உண‌ர்ந்து ஜ‌னாதிப‌தி மைத்திரிபால‌, பிர‌த‌ம‌ராக‌ ம‌ஹிந்த‌வை நிய‌மித்திருப்ப‌து பெரிதும் பார‌ட்டுக்குரிய‌ விட‌ய‌ம். நாட்டின் ய‌தார்த்த‌த்தை உண‌ர்ந்து ஜ‌னாதிப‌தி மைத்திரிபால‌, பிர‌த‌ம‌ராக‌ ம‌ஹிந்த‌வை நிய‌மித்திருப்ப‌து பெரிதும் பார‌ட்டுக்குரிய‌ விட‌ய‌ம். Reviewed by Madawala News on October 27, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.