தோப்பூரில் ஆர்ப்பாட்டம் . ( படங்கள் இணைப்பு)


-தோப்பூர் எம்.என்.எம்.புஹாரி -
போக்குவரத்துக்கு இடைஞலாக உள்ள தோப்பூர் சந்திப் பாலத்தையும், குன்றும் குழியுமாக காணப்படும்
05 கிலோ மீற்றர் தூரமுள்ள  தோப்பூர் - சேருவில வீதியையும் புனரமைத்துத் தருமாறு தெரிவித்து வெள்ளிக்கிழமை (26) ஜும்ஆ தொழுகையின் பின் தோப்பூர் சந்தியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தினை தோப்பூர் பிரதேசத்திலுள்ள சமூக அமைப்புக்கள் ஒன்றினைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் யுத்தம் நிறைவடைந்தும் இவ் வீதிக்கு விடிவு கிட்டாதா  உள்ளிட்ட பல வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூசிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். 
தோப்பூரில் ஆர்ப்பாட்டம் . ( படங்கள் இணைப்பு) தோப்பூரில் ஆர்ப்பாட்டம் . ( படங்கள் இணைப்பு) Reviewed by Madawala News on October 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.