தொழிலுக்காக வெளிநாடு சென்ற இவரை காணவில்லை... தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும்.


தொழிலுக்காக வெளிநாடு சென்ற நிலையில் காணாமல் போன பெண் தொடர்பில் பொது மக்களின்
உதவி கோரப்பட்டுள்ளது.

லெபனான் நாட்டில் தொழிலாக சென்ற பெண் தொடர்பில் தகவல் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.

ரம்புக்கனை, கொட்டவெல்ல பிரதேசத்தை சேர்ந்த ரேணுகா வனசிங்க என்ற பெண் தொடர்பிலேயே தகவல் கோரப்பட்டுள்ளது.

ரேணுகா வனசிங்க 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி லெனான் நோக்கி சென்றுள்ளார். எனினும் இதுவரையில் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இந்த பெண் தொடர்பில் தகவல் அறிந்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 0112 864 136 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் தகவல் வழங்க முடியும்.

தொழிலுக்காக வெளிநாடு சென்ற இவரை காணவில்லை... தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும். தொழிலுக்காக வெளிநாடு சென்ற இவரை காணவில்லை... தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும். Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.