(படங்கள்) இன்று நிந்தவூரில் சிறுவர் நன்னடத்தை பிரிவினரால் இடம்பெற்ற அதிரடி நடவடிக்கை.


(முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்)
சிறுவர் நன்னடத்தை பாதுகாப்பின் நிந்தவூர் பிரிவினரால் 31-10-2018 இன்று
அதிரடி நடவடிக்கையாக நிந்தவூர் 9ம், பிரிவு வௌவாலோடை  நூறு வீட்டுத்திட்டத்திலுல் மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கையின் நோக்கமானது பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் மற்றும் போதைவஸ்துக்களுக்கு அடிமையான சிறுவர்கள் ஏனையோர்களையும் கண்டறிந்து உடனே அவர்களுக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்முகமாக இன்று முதற்கட்ட நடவடிக்கையாக நிந்தவூர் 9ம், பிரிவு நூறு வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்றது.

மேலும் இன்று பேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் போது பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் சிலர் கையும் மெய்யுமாய் பிடிபட்டனர். இவர்களை நடவடிகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிசாரிடம் ஒப்படைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்பு அவர்களுக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செயப்பட்டதன் பின்னர் நிந்தவூர் பிரதேச செலாளர் அவர்களின் பரிந்துரையில் விடுவித்தனர்.

இன்று முதற்கட்டமாக இடம்பெற்ற இந்நடவடிக்கையானது இனி ஒவ்வொரு மாதமும் இதேபோன்று அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பிரதேச செயலாளர் T.M. முஹம்மட் அன்சார் அவர்கள் தெரிவித்துள்ளார்.  

இடம்பெற்ற இந்நடவடிக்கையானது நிந்தவூர் 9ம், பிரிவு கிராம உத்தியோகத்தர் H.M.I. அஸாதுல்லாஹ் (றசூல் G.S) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இதில் நிந்தவூர் பிரதேச செயலாளர் T.M. முஹம்மட் அன்சார் அவர்கள் கலந்துகொண்டதோ,சிறுவர் நன்னடத்தை பாதுகாப்பு பிரிவினர் , சம்மாந்துறை பொலிஸ், நிந்தவூர் 9ம், பிரிவு RDS உறுப்பினர், டெங்கு பரிசோதகர்கள் மற்றும் நிந்தவூர் பிர்தௌஸ் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் கலந்துகொண்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
(படங்கள்) இன்று நிந்தவூரில் சிறுவர் நன்னடத்தை பிரிவினரால் இடம்பெற்ற அதிரடி நடவடிக்கை. (படங்கள்) இன்று  நிந்தவூரில் சிறுவர் நன்னடத்தை பிரிவினரால்  இடம்பெற்ற அதிரடி நடவடிக்கை. Reviewed by Madawala News on October 31, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.