இவர் ஒரு நச்சு செடி. இப்படிப்பட்ட நச்சு செடி வளர்ந்து கிளை விட்டு வளர்ந்து வர முன்னர் மக்களாக இவரை அழித்து தீபாவளி கொண்டாட வேண்டும் .


- பாறுக் ஷிஹான்  -
ஒரு தவறான தெரிவின் வரலாற்று தடயம் இவர் ஒரு நச்சு செடி இப்படிப்பட்ட நச்சு செடி வளர்ந்து கிளை
விட்டு வளர்ந்து வர முன்னர் மக்களாக இவரை அழித்து தீபாவளி கொண்டாட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் தெரிவித்தார்.


வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் அவர்களின் அலுவலகத்தில் நேற்று(25) நடைபெற்ற ஊடக அறிவிப்பில்  புதிய கட்சி தொடங்குவது பற்றி முன்னாள் முதலமைச்சரின் அறிவித்தல் சம்மந்தமாக அவர் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

முதலமைச்சர் நேற்றைய தனது உரையினிலே விடுதலைப்புலிகளின் தமிழின இருப்பு போராட்டத்தினை ஒரு நோயாக அவர் தன்னுடைய வாயினால் சித்தரித்திருக்கின்றார் இப்படி பட்ட உத்தம விக்னேஸ்வரனின் பின்னால் மறத்தமிழன் பின் செல்வானா நிச்சயமாக அது நடக்காது

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தான் ஒரு முதலமைச்சர் வேட்பாளர் ஆக போட்டியிட தன்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லையாம் என்று நேற்றைய உரையில் கூறுகின்றார்.

எழுதி கொடுப்பதினை அப்படியே வாசிப்பது அவரது வழக்கம் அப்படி வாசித்து கொண்டு போகும் போதே அனைத்து கட்சிகளும் கேட்டு கொண்டால் தான் மீண்டும் போட்டியிடுவேன் என அவர் கொடுத்த பேட்டியினை மறந்து விட்டார் போல அதனால் தான் அப்படியாக கூறி உள்ளார் போல மேலும் கருத்து தெரிவித்த வன்னி எம். பி அவர் தானாக திட்டமிட்டு, அவருடைய கூட்டத்திற்க்கு கூக்குரல் இட வந்தவர்கள் அவர் தனது கருத்தினை கூறி இடை இடையே நிறுத்தும் வேளைகளில் அவர்கள் கூக்குரல் இடுவார்கள் அந்த நேரத்தில் அவர்களை பார்த்து இவர் புன்னகைப்பார்.

மிகவும் சிறந்த நாடகத்தினை நடத்தி இருக்கின்றார் அவருக்கு ஏற்ற சிறந்ததொரு மேடை சினிமாவில் ஒரு அரசியல் மேடை பேச்சை பார்த்தது போன்ற ஒரு உணர்வுதான் எனக்குள் ஏற்ப்பட்டது.

ஒரு தவறான தெரிவின் வரலாற்று தlயம் இவர் ஒரு நச்சு செடி இப்படிப்பட்ட நச்சு செடி வளர்ந்து கிளை விட்டு வளர்ந்து வர முன்னர் மக்களாக இவரை அளித்து தீபாவளி கொண்டாட வேண்டும் இந்த தீபாவளியின் முன் இவரது முடிவு உறுதிப்படுத்தப்பட மக்களின் கைகளில் விட்டு வைத்து மக்களுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை கூறி நிக்கின்றேன். என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் அவர்கள் தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்தினை வெளியிட்டது குறிப்பிட தக்கது.
இவர் ஒரு நச்சு செடி. இப்படிப்பட்ட நச்சு செடி வளர்ந்து கிளை விட்டு வளர்ந்து வர முன்னர் மக்களாக இவரை அழித்து தீபாவளி கொண்டாட வேண்டும் . இவர் ஒரு நச்சு செடி. இப்படிப்பட்ட நச்சு செடி வளர்ந்து கிளை விட்டு வளர்ந்து வர முன்னர் மக்களாக இவரை அழித்து தீபாவளி கொண்டாட வேண்டும் . Reviewed by Madawala News on October 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.