வாழ்க்கையை சித்தி அடையச் செய்வதற்கு சாரனர் இயக்கம் பாரிய பங்காற்றுகின்றது.


(மொஹொமட் ஆஸிக்)
பரீட்சைகளில் உயர் மட்டத்தில் சித்தி அடையும் மாணவர்களின் வாழ்க்கையை சித்தி
அடையச் செய்வதற்கு சாரனர்  இயக்கம் பாரிய பங்காற்றுகின்றது  என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன  தெரிவித்தார். (இன்று 20.10.2018)

இன்று 20 ம் திகதி கண்டி பொல்கொல்லையில்  அமைந்துள்ள  மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில்  இடம் பெற்ற 2014 ஆண்டு முதல் 2018 ஆண்டு வரையிலான  ஜனாதிபதி சாரணர் விறுது வழங்கும் விழாவில்   பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் இவ்வாறும் தெரிவித்தார்.


சாரணர் இயக்கத்தில் பங்கெடுக்கும்  மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது. இது உலகத்தில் நற்பண்பு கொண்ட பலரை உருவாக்கிய ஒரு அமைப்பாகும்.  இன்று சாரணர்களான உங்களது சீருடைகளைக ;காணும் போது எனது கடந்த கால சாரணர் வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. நானும் பொலன்னருவை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் போது சாரணர் இயக்கத்தில் பங்கு கொண்டேன்.
ஒரு நாள் சாரணர் வேலை வாரத்தின் போது வேலை தேடிச் சென்றேன் ஒரு அரச ஊழியர்  என்னை அழைத்து எனக்கு கோழி பன்னை ஒன்றை  சுத்தம் செய்யும் பணியை ஒப்படைத்தார். மண்வெட்டியால் சுமார் நான்கு மணி நேரம் வேலை செய்த பின் எனது அட்டையில கையெழுத்திற்டு இரண்டு ரூபாய் தந்தார். இப்படியான பல மறக்கமுடியாத நினைவுகள் எனது மனக் கண் முன் தோன்றுகின்றன.
நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சந்தர்பத்திலும் சரி , அமைச்சாரன போதும் சரி ஜனாதிபதியான போதும் என்னை வரவேற்க சாரணர் சீருடைய உடன் மாணவர்களாகிய நீங்கள் முன் தோன்றும் போது எனது சாரணர் வாழ்க்ககையும் சாரணர் கோட்பாடுகளும் தோன்றுp மறைகின்றன.

சாரணர் இயக்கத்தை பேட்டன் பவுல் சாமி  ஆரம்பித்த போது  அன்று இருந்த சமூக பொருளாதார கலாச்சார கல்வி தொழில்நுட்ப நிலைமைகள் இன்று பாரிய மாறுதல்களுக்குள்ளாகியுள்ளது. அன்றைய காலப்பகுதியிலிருந்த பொருளாதார அமைப்பு வேறு. தற்போது காணப்படுவது வேறு.  அன்றைய காலக்கட்டத்திற்கு  மாற்றமான  பொருளாதார கட்டமைப்பையே  தற்போது காண்கிறோம். அது போன்று சாரணர் இயக்கத்தின் கொள்கையும் காலத்திற்குக் காலம் மாற்றமடைய வேண்டும் என்று சிந்திப்பதில் தவறில்லை.  அவ்வாறு மாற்றமடைந்து இன்றைய சமூக பொருளாதார கல்வி நிலைமைகளுக்கு ஏற்ப அது பொருந்தக்கூடியதாக மாற வேண்டும்
இன்று  உலகப் பொருளாதர நிலைமைகளில் வரத்தக ரீதியாக பாரிய போட்டிகள் ஏற்பட்டுள்ளன. அதனால் குறித்த துறையில்  பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன ஆகவே அதற்கேற்போல்  பொருளாதார அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு திட்டமாக எமது சகல திட்டங்களும் எதிர்காலத்தில் இடம் பெற வேண்டும்
பரீட்சைக்கு முகம் கொடுக்கும்  மாணவர்கள் எவ்வாறு அதில் வெற்றி காண்கின்றார்களோ அதே விதமாக வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டும. வாழ்கையில் வெற்றி பெற சாரணர் இயக்க பாரிய பங்காற்றுகின்றது. சமூதாயம் வாழ்க்கைக்கு முகம் கொடுக்கக் கூடிய திறன்களை உருவாக்கிக்கொள்ளப் பழகுவதும் அவசியமாகும் எனவும் கூறினார்.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட  நாடுமுழுவதிலும் உள்ள 1200 மாணவர்களக்கு  ஜனாதிபதி சாரனர் விருது வழங்கப்பட்டன.


இலங்கை சாரணர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  இவ்  விழாவில் மத்திய மாகாண ஆளுனர் பீ.பீ. திசாநாயக்க, மத்திய மாகாண முன்னால் முதலமைச்சரும் கண்டி மாவட்ட சாரணர்  இயக்க தலைவருமான  சரத் ஏக்கநாயக்க, கண்டி மாநகர முதல்வர் கேசர சேனநாயக்க மற்றும்   இலங்கை சாரனர் ;இயக்கத்தின் ஆனையாளர் மெரில்  குணதிலக்க மற்றம்  சங்க உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாழ்க்கையை சித்தி அடையச் செய்வதற்கு சாரனர் இயக்கம் பாரிய பங்காற்றுகின்றது. வாழ்க்கையை சித்தி அடையச் செய்வதற்கு சாரனர்  இயக்கம் பாரிய பங்காற்றுகின்றது. Reviewed by Madawala News on October 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.