கலைஞர்களின் வீடு தேடிச்சென்று “சுவதம் கலைஞர் விருது” வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு.


(றியாத் ஏ. மஜீத்)
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில்  சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சாரப்
பிரிவினதும் கலாச்சார அதிகார சபையினதும் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் புகழ் பூர்த்த பல்துறை சார்ந்த கலைஞர்களை வீடு தேடிச் சென்று சுவதம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (19) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.நௌஷானா ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் உப தலைவர் ஏ.பீர்முகம்மட், செயலாளர் விரிவுரையாளர் எம்.நியாஸ், பொருளாளர் கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரஃப், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம்.றிம்ஷான், கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், ஊடகவியலாளர் றியாத் ஏ. மஜீத் உள்ளிட்ட குழுவினர் சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, எழுத்தாளர் விரிவுரையாளர் எம்.சீ.எம.சீ.றிழா, எழுத்தாளர் ஓய்வுபெற்ற அதிபர் எம்.நியாஸ், எழுத்தாளர் யூ.எல்.ஏ.மஜீத்,  கவிஞர்; மருதூர் றஸ்மி மஜீத், ஓய்வுபெற்ற சங்கீத விரிவுரையாளர் எம்.எம்.எம்.மஹ்றூப், நாடக கலைஞர் எம்.ஐ.எப்.சஜ்னாஸ்  ஆகியோரின் வீடு தேடிச்சென்று சுவதம் நினைவுச் சின்னம், பதக்கம் மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கௌரவித்தனர்.
கலைஞர்களின் வீடு தேடிச்சென்று “சுவதம் கலைஞர் விருது” வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு. கலைஞர்களின் வீடு தேடிச்சென்று “சுவதம் கலைஞர் விருது” வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு. Reviewed by Madawala News on October 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.