பிரேத பரிசோதனை அறிக்கை காலதாமதம் ஆனது.


-பாருக் ஷிஹான்-
பிரேத பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்க  காலதாமதம் ஆகியதால்   விரிவுரையாளரின்
உயிரிழப்பு தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

திருகோணமலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் இன்று(22)  காணாமற் போயிருந்த நிலையில் கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் போதநாயகியின்  உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது குறித்த விரிவுரையாளரின் இறப்பு ஏற்பட்ட விதம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் மன்றிற்கு இதுவரை சமர்ப்பிக்கவில்லை.இதனால் நீதிவான் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது மன்றிற்கு இறந்த விரிவுரையாளரின்  கணவன் வன்னியூர் செந்தூரன் அவரது சகோதரர் மற்றும் நண்பர்களும்  விரிவுரையாளரரின் தாய் சகோதரர்களும் விசாரணைக்காக வந்திருந்தனர்.

மேலும் குறித்த விரிவுரையாளரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் மேற்கொண்டிருந்தமை யாவரும் அறிந்ததே.திருகோணமலை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி குறித்த இறப்பு நடைபெற்ற வேளை விடுமுறையில்  சென்றிருந்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கை காலதாமதம் ஆனது. பிரேத பரிசோதனை அறிக்கை காலதாமதம் ஆனது. Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.